'தல' படம் பார்த்துக்கிட்டு இருக்கிறவன்டா: 'வாலு' சிம்புவின் பஞ்ச்
சென்னை: வாலு படத்தில் சிம்பு தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அஜீத் குமார் பற்றி புகழ்ந்து வசனம் பேசியுள்ளாராம்.
சிம்புவின் வாலு படம் அஜீத் குமாரின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் சிம்புவும் அவரது காதலி ஹன்சிகாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் என்று இத்தனை நாட்களாக செய்திகள் வெளியிட்டோம்.
இந்நிலையில் சிம்பு நேற்று மாலை அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

நான் சிங்கிள்
ஹன்சிகாவும், தானும் இனி காதலர்கள் இல்லை என்றும், தான் சிங்கிள் தான் என்றும் சிம்பு அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அஜீத், விஜய்
வாலு படத்தில் ஒரு காட்சியில் சிம்பு அஜீத் மாஸ்க் போட்டு பைக் ஓட்ட அவர் பின்னால் சந்தானம் விஜய் மாஸ்க் போட்டு அமர்ந்து செல்லும் காட்சி அண்மையில் தான் சென்னையில் படமாக்கப்பட்டது.

ஃபைட் வருமா?
வாலு படத்தில் ஒரு கதாபாத்திரம் சிம்புவை பார்த்து டேய் உனக்கெல்லாம் ஃபைட் வருமா என்று கேட்பாராம். அதற்கு சிம்பு 'தல' படம் பார்த்துட்டு இருக்கிறவன்டா என்று பதில் அளிப்பாராம்.

ஷார்ப்
படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தின் பெயர் ஷார்ப். அவர் படத்தில் அஜீத் பற்றி பல வசனங்கள் பேசி நடித்துள்ளாராம்.

சிம்புவின் காதல்
சிம்புவின் படங்களை விட அண்மையில் அவரது காதல் விவகாரம் பற்றி தான் அதிகமாக செய்திகள் வெளியாகின்றன. அவர் தனது முன்னாள் காதலி நயன்தாராவுடன் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











