»   »  த்ரிஷாவுக்கும், எனக்கும் இடையே இருப்பது காதலோ, நட்போ இல்லை அது...: சிம்பு

த்ரிஷாவுக்கும், எனக்கும் இடையே இருப்பது காதலோ, நட்போ இல்லை அது...: சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிம்புவின் நயனும் த்ரிஷாவும்- வீடியோ

சென்னை: நடிகை த்ரிஷாவை பற்றி பெருமையாக பேசியுள்ளார் சிம்பு.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்புவும், த்ரிஷாவும் ஜோடியாக நடித்தார்கள். அவர்களின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்பு இல்லை.

சிம்புவுக்கு பதில் மாதவன் நடிக்க உள்ளார்.

த்ரிஷா

த்ரிஷா

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு தனது தோழி த்ரிஷா பற்றி பெருமையாக பேசியுள்ளார். த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே தெரியும் என்று கூறியுள்ளார்.

பந்தா

பந்தா

த்ரிஷா நடிக்க வருவார் என்று தெரியாது. ஒரு நாள் திடீர் என்று ஹீரோயினாகிவிட்டார். ஹீரோயினாகிவிட்டால் இருக்கும் பந்தா எதுவும் த்ரிஷாவிடம் கிடையாது என்கிறார் சிம்பு.

நட்பு

நட்பு

எது பற்றி வேண்டுமானாலும் நான் த்ரிஷாவிடம் பேசலாம். அதே போன்று அவரும் என்னுடன் பேசலாம். இது நட்பும் அல்ல, காதலும் அல்ல, ஒரு வகையான அன்பு, ஆதரவு என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

பெருமை

பெருமை

த்ரிஷா பற்றி சிம்பு பெருமையாக கூறியதை கேட்டு அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிம்புவும், த்ரிஷாவும் நல்ல நண்பர்கள் என்பது அவர் கூறாமலேயே அனைவருக்கும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Simbu has talked high of good friend Trisha in a television programme. He said that Trisha is the same right from the beginning irrespective of her status.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil