“எனக்கு கட் அவுட் வைங்க, அதுக்கு அண்டா அண்டாவா பால் ஊத்துங்க”.. அந்தர்பல்டி அடித்த சிம்பு

ரசிகர்களுக்கு அன்புக்கட்டளை என புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

By Siva

சென்னை: தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பால் ஊத்துங்கள் என ரசிகர்களுக்கு சிம்பு அன்புக்கட்டளை விடுத்துள்ளார்.

அடுத்த மாதம் சிம்பு நடித்த வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் ரிலீசாக இருக்கிறது. இதையொட்டி, அண்மையில் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய சிம்பு, 'எனது பட ரிலீசின் போது, ரசிகர்கள் யாரும் எனக்கு கட் அவுட் வைக்க வேண்டாம். அதற்கு பாலாபிஷேகம் பண்ண வேண்டாம்' என அறிவுறுத்தியிருந்தார்.

கூடவே, அதற்காக செலவு செய்யும் பணத்தில் ரசிகர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது பரிசுப் பொருள் வாங்கித் தருமாறும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இந்த வீடியோவிற்கு எதிர்மாறான பலன் கிடைத்தது.

இதனால் மனவருத்தம் அடைந்த சிம்பு, தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பால் அபிஷேகம்:

பால் அபிஷேகம்:

அதில் அவர், "நான் இதற்கு முன்பு கட் அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்றேன். அதற்கு சிலர் எனக்கு ரசிகர்களே கிடையாது என்றும் வெறும் 2,3 பேர் தான் இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். குறைந்த ரசிகர்கள் கொண்ட சிம்பு ஏன் இதெல்லாம் கூறுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

அன்புக் கட்டளை:

அன்புக் கட்டளை:

எனவே, இதற்கு முன்பு பால் அபிஷேகம் குறித்து பேசியதை நான் திருத்திக் கொள்கிறேன். அவர்கள் கூறியது போல், எனக்கு இருக்கும் 2,3 ரசிகர்களுக்கு நான் ஒரு அன்புக் கட்டளை இடுகிறேன்.

பாலபிஷேகம்:

பாலபிஷேகம்:

இதுவரை என் படங்களுக்கு வைக்காத அளவிற்கு இந்தப் படத்திற்கு பேனர், கட்அவுட் எல்லாம் வையுங்கள். பால் அபிஷேகம் செய்யுங்கள். பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம். அண்டா அண்டாவாக பாலை கொண்டு வந்து ஊத்துங்கள். இதுவே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்' என இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

வைரல் வீடியோ:

சிம்பு கோபமும், மன வருத்தமும் கலந்து பேசியுள்ள இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். சமீபகாலமாக சிம்பு தனது ரசிகர்களுடன் இதுபோல் அடிக்கடி வீடியோ வாயிலாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X