சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு!

சென்னை: சர்க்கார் திரைப்பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் நேரில் விவாதிக்க தயார் என சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் பெயர் மாநாடு என வைக்கப்படுள்ளது. எ வெங்கட்பிரபு பொலிட்டிகல் ஜர்னி என்ற சப் டைட்டிலுடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Simbu ready to open about Sarkar issue with Anbumani!

பல வருடங்களாகடி.ராஜேந்தர் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சிம்புவும் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துகளைத் தெரிவித்துவருகிறார். இவற்றை எல்லாம் தொடர்பு படுத்தி பார்க்கும்போது, மாநாடு என்ற திரைப்படம் மூலம் சிம்பு அரசியலுக்கு வர அடிக்கோடிடுகிறார் என நெட்டிசன்கள் கருத்து சொல்ல ஆரம்பித்தனர்.

இதுகுறித்து விளக்கமளிக்கும் விதமாக சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களாக தான் ஆசைப்பட்ட கூட்டணி அமைந்ததற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனர் வெங்கட்பிரபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

படம் நன்றாக வரும் என நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த சிம்பு, சர்க்கார் திரைப்பட பிரச்சனை குறித்து பேச ஆரம்பித்தார். அவ்வப்போது திரைப்படங்களுக்கு பிரச்சனை வருவதாகவும், அன்று பாபா முதல் இன்று சர்க்கார் வரை ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருக்கிறது என்றும் கூறினார்.

இதுதொடர்பாக பேச பாமக தலைவர் அன்புமணி அழைத்தால் பொதுமேடையில் அமர்ந்து விவாதிக்க தயாராக இருப்பதாகவும், அப்படி செய்வதன்மூலம் மட்டுமே இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X