சிம்புவிற்கு யுவன் சொன்ன நல்ல விஷயம் இது தானா ?

சென்னை : சிம்பு நடித்து முடித்துள்ள மாநாடு படம் ரிலீசிற்காக மும்முரமாக தயாராகி வருகிறது. இந்த படத்தை அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு, தியேட்டரில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த படம் பற்றிய அப்டேட்டை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டைரக்டர் வெங்கட் பிரபு என மாறி மாறி வெளியிட்டு பரபரப்பை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் சிம்புவுடன் இருக்கும் ஃபோட்டோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட யுவன், நிறைய நல்ல விஷயங்கள் உனக்காக இருக்கு என கேப்ஷன் பதிவிட்டிருந்தார்.

யுவனை பின்தொடர்ந்த காளிதாஸ்

யுவனை பின்தொடர்ந்த காளிதாஸ்

அடுத்த நாளே யுவனுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பதிவிட்ட காளிதாஸ் ஜெயராம், சிம்புவை tag செய்து, நல்ல விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது என கருத்து பதிவிட்டார். இது பற்றி விசாரித்த போது யுவன் இசையில் காளிதாஸ், மேகா ஆகாஷ் நடிக்கும் பாடலை சிம்பு பாட போகிறார் என கூறப்படுகிறது.

மியூசிக் வீடியோவில் பாடிய சிம்பு

மியூசிக் வீடியோவில் பாடிய சிம்பு

இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோக்களை யுவன் எப்போதும் ப்ரோமோட் செய்வார். பாட்ஷாவுடன் இணைந்து பல மொழிகளில் இதனை சமீபத்தில் உருவாக்க உள்ளார். இந்த ரொமான்டிக் நம்பர் வீடியோவில் தான் சிம்பு பாடி உள்ளார்.

Recommended Video

குடியை விட்ட சிம்பு.. தம்பியை களமிறக்கும் ராகவா லாரன்ஸ்.. கலக்கல் டாப் 5 பீட்ஸ்!
மீண்டும் காளிதாஸ்– மேகா ஜோடி

மீண்டும் காளிதாஸ்– மேகா ஜோடி

இதற்கு முன் ஒரு பக்க கதை வீடியோவில் இணைந்து நடித்த காளிதாஸ் - மேகா ஆகாஷ் ஜோடி, மீண்டும் இந்த வீடியோவில் ஒரு சேர உள்ளது. இந்த மியூசிக் வீடியோ வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிட்டி ஸ்டூடியோ மற்றும் ஈசிஆரில் உள்ள வீட்டில் படமாக்கப்பட உள்ளது.

குட்டி பட்டாஸ் குழு தான் இதிலும்

குட்டி பட்டாஸ் குழு தான் இதிலும்

சாண்டி மாஸ்டர் தான் இதற்கு நடனம் அமைத்துள்ளார். அஷ்வினின் குட்டி பட்டாஸ் வீடியோவில் நடன மாடி பிரபலமானவர்கள் இந்த வீடியோவிலும் இடம்பெற உள்ளனர். ஜுலை மாதத்தின் முதல் பாதியில் இந்த வீடியோவை ரிலீஸ் செய்ய இசைக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X