ரசிகர்களுக்காக சிம்பு செய்த காரியம்..இணையத்தில் கசிந்த தகவல்..பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை : ரசிகர்களுக்காக சிம்பு செய்த செயல் இணையத்தில் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

STR |POSITIVITY நிறைய தெரியுது ! Simbu Super Emotional Speech | Paper Rocket Trailer| *Launch

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. சிம்பு நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு பலவிதமான சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும், அந்த படத்தில் உடல் எடையை குறித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மாஸ் என்ட்ரி

மாஸ் என்ட்ரி

இதையடுத்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படத்தில் "வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேனு சொல்லு" என்பது போல அட்டகாசமாக மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் சிம்பு. மாநாடு திரைப்படம் சிலம்பரசனுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது. டைம் லூப் முறையில் உருவாக்கப்பட்ட இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

படங்களில் கவனம்

படங்களில் கவனம்

அதோடு சமீப காலமாகவே சிம்பு தன்னுடயை படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். செப்டம்பர் 15ந் தேதி சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் உருவாக உள்ள பத்து தல படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

மறுத்த சிம்பு

மறுத்த சிம்பு

இந்நிலையில், பிரபல பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் சிம்புவை நடிக்க வைக்க அவரிடம் அணுகியதாகவும், இந்த விளம்பரத்தில் நடிக்க பெரும் தொகை பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.ஆனால், சிம்பு மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம் என ஒட்டுமொத்தமாக ஆளேமாறிப்போன சிம்பு ரசிகர்களுக்கு முன் உதாரணமாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால்,ரசிகர்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X