மீண்டும் இணையும் மாநாடு கூட்டணி... சூப்பரான விஷயமா இருக்கே!

சென்னை : நடிகர் எஸ்ஜே சூர்யா தமிழ் திரையுலகின் சிறப்பான இயக்குநராக அறிமுகமாகி, நல்ல ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். தற்போது வில்லன், கேரக்டர் ரோல் மற்றும் ஹீரோ என மாற்றி மாற்றி நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

சிறப்பான இயக்குநர்

சிறப்பான இயக்குநர்

நடிகர் எஸ்ஜே சூர்யா குஷி, வாலி உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நிரூபித்தவர். தொடர்ந்து படங்களை இயக்கிய இவர் தன்னை ஹீரோவாக மாற்றி நடிப்பு, இயக்கம் என்று தன்னை பிசியாக்கிக் கொண்டார். தொடர்ந்து தனது படங்களை இயக்கிய அவர் ஒரு கட்டத்தில் மற்றவர்கள் படங்களிலும் நடிக்கத் துவங்கினார்.

பன்முக கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா

பன்முக கேரக்டர்களில் எஸ்ஜே சூர்யா

தற்போது மிகச்சிறந்த ஹீரோவாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக, வில்லனாக பல பரிணாமங்களில் தன்னுடைய நடிப்பை மெருகேற்றி வருகிறார். வேகமான டயலாக் டெலிவரி இவரது ஸ்டைலாக உள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.

மாநாடு படத்தில் சிறப்பான ரோல்

மாநாடு படத்தில் சிறப்பான ரோல்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் இவரது ரோல் மிகவும் பேசப்பட்டது. படத்தில் இவரது டயலாக்குகள் மிகவும் பிரபலமானது. வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு டயலாக்கில் தற்போது படமும் உருவாகவுள்ளது. அந்த அளவில் இவரது டயலாக் டெலிவரி படத்தில் சிறப்பாக அமைந்தது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் டான், ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை, அமிதாப்பச்சனுடன் உயர்ந்த மனிதன் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளது. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் இவர் வில்லனாக இணைந்துள்ளார்.

எஸ்ஜே சூர்யாவின் கடமையை செய்

எஸ்ஜே சூர்யாவின் கடமையை செய்

முன்னதாக எஸ்ஜே சூர்யா ஹீரோவாக நடித்துள்ள படம் கடமையை செய் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு யாஷிகா ஆனந்த் ஜோடியாகியுள்ளார். வெங்கட் ராகவன் படத்தை இயக்கியுள்ள நிலையில் அருண் ராஜ் இசையமைத்துள்ளார்.

படத்தை வெளியிடும் சிம்பு

படத்தை வெளியிடும் சிம்பு

கணேஷ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் நஹர் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை தற்போது சிம்புவின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடவுள்ளது. வரும் மே மாதம் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது சிம்பு படத்தை வெளியிட உள்ளது படத்திற்கு புதிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X