Manikandan: ரொமாண்டிக் கேரக்டரில் நடிக்கும் மணிகண்டன்.. ரசிகர்களை கவர்ந்த அடுத்தப்பட டைட்டில்!

சென்னை: நடிகர் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட்நைட் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்தப் படத்திற்கு முன்னதாகவே கேரக்டர் ரோல்களில் சில படங்களில் நடித்துள்ளார் மணிகண்டன். ஆனால் குட்நைட் படம்தான் இவருக்கு புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது.

Simbu Released First Look Poster of ‘Lover’ Movie, With Manikandan in Lead Role

இந்நிலையில் மணிகண்டனின் அடுத்தப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் மணிகண்டன்: நடிகர் மணிகண்டன் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஜெய்பீம், ஏலே போன்ற படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்துள்ளார். காலா படத்தில் ரஜினியின் மகனாக கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மணிகண்டன் லீட் கேரக்டரில் நடித்திருந்த குட்நைட் படம் இவரை உச்சியில் ஏற்றி வைத்துள்ளது. முன்னதாக சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்த ஜெய்பீம் படத்தின் ராசாக்கண்ணு கேரக்டரும் இவருக்கு சிறப்பாக அமைந்தது.

இயக்குநர் மணிகண்டன்: மணிகண்டனுக்கு தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகள் கதவை தட்டி வருகின்றன. இது மட்டுமில்லாமல் திரைப்படங்களுக்கு வசனம் மற்றும் திரைக்கதையையும் எழுதி வருகிறார் மணிகண்டன். நடிகர், வசனகர்த்தா என அடுத்தடுத்த தளங்களில் பயணித்துவரும் மணிகண்டன் இயக்குநர் அவதாரமும் எடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் நரை எழுதும் சுயசரிதம் என்ற திரைப்படம் சமீபத்தில் சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மணிகண்டனின் லவ்வர் படம்: இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவசங்கரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் மணிகண்டன் அடுத்ததாக நடித்துவரும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். படத்திற்கு லவ்வர் என்று பெயரிடப்பட்டுள்ளது. ரொமாண்டிக் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கி வருகிறார்.

லவ்வர் படத்தின் பர்ஸ்ட் லுக்: தற்போது டைட்டிலுடன் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு சமூக வலைதளம் மூலம் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவத்தை கொடுக்க தயாராகுமாறு அவர் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிம்பு வெளியிட்ட டைட்டில் லுக்: தொடர்ந்து சிம்புவிற்கு நன்றிகளை தெரிவித்த மணிகண்டன், இந்தப் படம் தனக்கும் படக்குழுவினருக்கும் மிகவும் ஸ்பெஷல் என்றும் அதை சிம்பு மேலும் ஸ்பெஷலாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். படத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தப் படத்தின்மூலம் குட்நைட் தயாரிப்பாளர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார் மணிகண்டன்.

மீண்டும் இணைந்த குட்நைட் டீம்: முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நடிகர் விஜய் சேதுபதி துவக்கி வைத்திருந்தார். படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா இணைந்துள்ளார். கண்ணா ரவி படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். குட் நைட் படத்தில் இணைந்திருந்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், படத்தொகுப்பாளர் பரத் விக்ரம் போன்றவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X