For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டிஆர்.,ஆ இது?...என்ன இப்படி ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டார்...சிம்பு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ

  |

  சென்னை : டி.ராஜேந்தரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. நிஜமாவே இது டிஆர்.,தானா என ரசிகர்கள் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

  தமிழ் சினிமாவில் 1980, 90 களில் முன்னணி நடிகர்கள், டைரக்டர்களில் ஒருவராக திகழ்ந்தவர் டி.ராஜேந்தர். குடும்ப சென்டிமென்ட் ஆகட்டும், காதல் சென்டிமென்ட் ஆகட்டும் இவரது படங்களை மிஞ்ச ஆளே கிடையாது.

  அதுவும் காதலில் தோல்வி அடைந்தவர்களின் உணர்வுகளை பாடல்களிலும், டயலாக்கிலும் பிழிந்து எடுத்திருப்பார். அடுக்கு மொழி வசனம் என்றாலே அது டிஆர்., தான் என சொல்லும் அளவிற்கு பிரான்ட் நேமாக தனக்கென தனி இடத்தை, தனி ஸ்டையிலை வைத்திருப்பவர் டிஆர்.

  மின் மயானத்தில் கதறிய மீனா... வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது !மின் மயானத்தில் கதறிய மீனா... வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது !

  பன்முக தன்மை கொண்ட டிஆர்

  பன்முக தன்மை கொண்ட டிஆர்

  தனது படங்களுக்கு தானே கதை, டைரக்ஷன், இசை, பாடல் என அனைத்தையும் அமைக்கும் பன்முக திறமை கொண்டவராக உள்ளவர் டி.ஆர்., நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த டிஆர், விஜய் சேதுபதி நடித்த கவண் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். நடுவில் சிறிது நாட்கள் அரசியலிலும் பிஸியாக இருந்தார்.

  டிஆர்., மருத்துவமனையில் அனுமதி

  டிஆர்., மருத்துவமனையில் அனுமதி

  அவ்வப்போது முக்கியமான சமயங்களில் மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வந்தார். சமீபத்தில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரை மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல குடும்பத்தினர்கள் முடிவு செய்தனர்.

  டிஆரின் லேட்டஸ்ட் போட்டோ

  டிஆரின் லேட்டஸ்ட் போட்டோ

  அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்ட டி.ராஜேந்தருக்கு அங்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு அப்பா டி.ராஜேந்தர் மற்றும் அம்மா உஷா ராஜேந்தருடன் இருக்கும் போட்டோவை சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு டிஆர் நலமுடன் இருக்கிறார் என சொல்வதற்காக தான் இந்த போட்டோவை வெளியிட்டார்.

  என்ன இப்படி ஆகி விட்டார்

  என்ன இப்படி ஆகி விட்டார்

  ஆனால் இந்த போட்டோவில் நரைத்த தாடி, மெலிந்த உடல் என ஆள் அடையாளமே தெரியாமல் மாறி உள்ளார் டிஆர். இதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் அவர் நலமுடன் இருப்பதற்காக சந்தோஷம் தெரிவித்ததுடன், விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  Recommended Video

  T.Rajendar விரைவில் நலம்பெற சிறப்பு பூஜை செய்த CoolSuresh |Filmibeat Tamil #Celebrity
  மீண்டும் சினிமா இயக்குகிறாரா டிஆர்

  மீண்டும் சினிமா இயக்குகிறாரா டிஆர்

  டி.ராஜேந்தர் தற்போது மீண்டும் படம் இயக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பேரன், பேத்திகளை வெளிநாடு ட்ரிப் அழைத்துச் செல்ல டிஆர் விரும்பினாராம். இதனால் சிகிச்சைக்காக செல்லும் போது, குடும்பத்தோடு போய் வருவோம் என ஃபேமிலி ட்ரிப்பாக மாற்றி விட்டாராம் சிம்பு. டிஆர்.,ன் சிகிச்சைக்காக தான் தற்போது நடித்து வரும் பத்துதல படத்தின் வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் சிம்பு.

  English summary
  Simbu released his father T.Rajendar's latest photo after surgery. In this photo T.Rajendar looking very lean. Fans wished for his speedy recovery. After return from USA, T.Rajendar to again back to direction. Simbu also to focus on his ongoing project Pathu thalai.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X