twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'என் ரசிகர்கள், விஜய்யின் 'மாஸ்டர்' படம் பாருங்கள்' நடிகர் சிம்பு திடீர் அறிக்கை..அரசுக்கு கோரிக்கை

    By
    |

    சென்னை: தமிழக அரசு, தியேட்டர்களில் நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்புக்கு உத்தரவிட வேண்டும் என்று நடிகர் சிம்பு கோரிக்கை விடுத்துள்ளார்.

    நடிகர் சிம்பு இப்போது நடித்து முடித்துள்ள படம், ஈஸ்வரன். இதை சுசீந்தரன் இயக்கி உள்ளார்.

    யாருக்கு என்ன கேம் பிளான்.. புட்டு புட்டு வைத்த ஹவுஸ்மேட்ஸ்.. பாலா பிளானை தோலுரித்த கேபி! யாருக்கு என்ன கேம் பிளான்.. புட்டு புட்டு வைத்த ஹவுஸ்மேட்ஸ்.. பாலா பிளானை தோலுரித்த கேபி!

    இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர்.

    நடிகர் விஜய்

    நடிகர் விஜய்

    இதன் பாடல் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன் நடந்தது. சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் நூறு சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் நடிகர் சிம்புவும் அதே கோரிக்கையை வைத்துள்ளார்.

    ஆன்லைன் வெளியீடு

    ஆன்லைன் வெளியீடு

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம்.

    சாதாரண முயற்சியல்ல

    சாதாரண முயற்சியல்ல

    அதற்காகத்தான் இந்தக் கொரானா காலத்திலும் வெகு பிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    செய்யும் மரியாதை

    செய்யும் மரியாதை

    அதே சமயம் அண்ணன் விஜய் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை. அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள்.

    மீண்டும் விடிவுகாலம்

    மீண்டும் விடிவுகாலம்

    மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார். திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும்.

    மாஸ்டர் பாருங்கள்

    மாஸ்டர் பாருங்கள்

    கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள், ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரானா தாண்டி
    வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களில் இருந்து வெளிவர வேண்டும்.

    செழிக்க வேண்டும்

    செழிக்க வேண்டும்

    அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும். விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன்.
    கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.

    நல்ல உத்தரவு

    நல்ல உத்தரவு

    திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டு விட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசு, தயை கூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். தமிழக முதல்வர் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் நூறு சதவீத இருக்கை ஆக்கிரமிப்பு குறித்து உத்தரவிட்டால், மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம். இவ்வாறு நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

    English summary
    After Vijay, Actor Simbu also requested to the Government for full occupancy in theatres
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X