பிறந்தநாளில் நான் ஊரில் இல்லை.. வராதீங்கப்பா ப்ளீஸ்... ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்!

சென்னை: பிறந்த நாளன்று தான் ஊரில் இல்லை என்பதால் ரசிகர்கள் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என் நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுல் ஒருவர் நடிகர் சிம்பு. பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அவரது நடிப்பில் அண்மையில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியானது.

ஈஸ்வரன் திரைப்படம்

ஈஸ்வரன் திரைப்படம்

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்காக அதிகளவு எடையை குறைத்து பழைய சிம்புவாக மாறியுள்ளார் சிம்பு. ஈஸ்வரம் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வரும் 3ஆம் தேதி பிறந்தநாள்

வரும் 3ஆம் தேதி பிறந்தநாள்

தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வரும் 3ஆம் தேதி நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

சிம்பு பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் வீட்டின் முன்பு திரண்டு அவருக்கு வாழ்த்து சொல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு பிறந்தநாளின் போது தான் ஊரில் இல்லை என்பதால் ரசிகர்கள் யாரும் வீட்டின் முன்பு காத்திருக்க வேண்டாம் என நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எத்தனை தடைகளை..

எத்தனை தடைகளை..

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, என் உயிரினும் மேலான ரசிகர்களுக்கு, வணக்கங்கள். எத்தனை தடைகளை நான் கடந்து வந்தாலும்... என்னுடன் என்றுமே நின்றிருக்கிறது உங்கள் பேரன்பு.

வெற்றி பெறச் செய்தீர்கள்

வெற்றி பெறச் செய்தீர்கள்

அதுதான் நான் அடுத்தடுத்து படங்கள் தருவதற்கும் உடல் எடையைக் குறைத்து உத்வேகமானதற்கும் மிக முக்கிய காரணம். கொரோனா காலக்கட்டத்திற்காக வெகு விரைவாக முடிக்கப்பட்ட ஈஸ்வரன் படத்திற்கு பெரிய வரவேற்பைக் கொடுத்தீர்கள். வெற்றி பெறச் செய்தீர்கள்.

வெளியூர் செல்கிறேன்..

வெளியூர் செல்கிறேன்..

உங்களை நான் ரசிகர்கள் என்று சொல்வதை விட எனது குடும்பம் என்று சொல்வது சரியாக இருக்கும். உங்கள் அன்பிற்கு நிறைய நன்றிக் கடன்பட்டுள்ளேன். எனது பிறந்தநாளன்று நான உங்களோடுதான் இருக்க வேண்டும். ஆனால் சில முன் தீர்மானங்களால் ஊரில் இல்லை. வெளியூர் செல்கிறேன்.

ஏமாற்றமடைய வேண்டாம்

ஏமாற்றமடைய வேண்டாம்

என் குடும்பத்தினர் வந்து வீட்டு முன் காத்திருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நண்பர்கள் யாரும் என் பிறந்தநாளன்று சந்திக்க வந்து ஏமாற்றமடைய வேண்டாம். உங்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வை விரைவில் ஒருங்கிணைப்பேன். நாம் சந்திப்போம்.

மாநாடு டீசர்

மாநாடு டீசர்

ஒரு சிறு மகிழ்ச்சியிக என் பிறந்த நாளன்று மாநாடு டீசர் வெளியாகும். மகிழுங்கள். நிச்சயம் இனி நமது ஆண்டாக வெற்றிகரமான ஆண்டாக இருக்கும். அனைவருக்கும் அன்பும்.. நன்றியும்.. இவ்வாறு நடிகர் சிம்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X