சிம்பு - தேசிங் பெரியசாமி படத்தில் இருந்து கமல் விலகியது ஏன்?.. சிம்புவே இப்படி ஓபனா சொல்லிட்டாரே!

சென்னை: சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வீடியோ காட்சி வெளியானது. மேலும், சிம்புவின் 49, 50 மற்றும் 51 என வரிசையாக அடுத்தடுத்த பட அறிவிப்புகள் வரிசைக்கட்டி வெளியாகின. இதில், எஸ்டிஆர் 48 என அறிவிக்கப்பட்ட படம் தற்போது எஸ்டிஆர் 50 என மாறியுள்ளது பலரையும் ஷாக் ஆக்கியது. சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ட்விட்டர் ஸ்பேஸில் அதற்கான விளக்கத்தையும் கமல்ஹாசன் ஏன் இந்த படத்தை தயாரிக்கவில்லை என்பதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா நடிக்கும் படத்தில் சிம்புவும் இணைந்து நடித்துள்ளார். தக் லைஃப் படத்தில் கமலை விட சிம்புவுக்கே அதிக முக்கியத்துவம் இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

simbu kamal haasan str 50

தேசிங் பெரியசாமி படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விலகிய நிலையில், அந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என உள்ளே வந்த கமல்ஹாசன் சிம்புவை வைத்து படம் பண்ணப் போவதாக அறிவித்தார். ஆனால், கடைசியில் சிம்புவே அந்த படத்தை தயாரிக்கப் போகிறார்.

காத்திருந்து காத்திருந்து: கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை துல்கர் சல்மான், ரிது வர்மா, கெளதம் மேனனை வைத்து கடந்த 2020ம் ஆண்டு தேசிங் பெரியசாமி இயக்கினார். அந்த படத்தை பார்த்த பலரும் குறைந்த பட்ஜெட்டில் பாலிவுட் படம் போல மேக்கிங் உள்ளதே என பலரும் இயக்குநரை பாராட்டினர். ரஜினிகாந்த் தனக்கு ஒரு கதையை ரெடி பண்ண சொல்ல, பிரம்மாண்ட கதையை உருவாக்கினார் தேசிங் பெரியசாமி. ஆனால், படத்தின் பட்ஜெட்டை பார்த்து நைஸாக ஒதுங்கிவிட்டார் ரஜினிகாந்த். அதன் பின்னர், அந்த படத்தில் நடிக்க சிம்பு முன் வந்த நிலையில், கமல்ஹாசன் தயாரிக்க முன் வந்தார். 5 ஆண்டுகளாக இன்னமும் தேசிங் பெரியசாமி அந்த படத்தை ஆரம்பிக்க முடியாமல் "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி" என வெயிட் செய்து வருகிறார். இப்போ சிம்புவின் 50வது படமாக அந்த படம் உருவாக உள்ளது.

கமல் விலகியது ஏன்?: நடிகர் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தை முதலில் ஆரம்பிக்காமல் உடனடியாக பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அந்த படம் முடிந்த பிறகு தனது தயாரிப்பு நிறுவனமான ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தில் 50வது படமாக பிரம்மாண்டமாக தேசிங் பெரியசாமி படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். இந்நிலையில், பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ட்விட்டர் ஸ்பேஸில் பங்கேற்று பேசிய சிம்பு, இந்த படத்தில் பெரிய ரிஸ்க் இருக்கிறது என்றும் மற்றவர்களுக்கு அதை கொடுக்க வேண்டாம் என்பதற்காக நானே பண்ணலாம் என்கிற முடிவை எடுத்தேன். கமல் சார் கிட்ட போய் தயங்கி தயங்கி இந்த படத்தை நானே பண்றேன்னு சொன்னேன். அவர் ஏன் என்னாச்சுன்னு கேட்டார். இல்லை சார் நான் பண்றேன்னு சொன்னதும் தான் அவர் ஓகே சொன்னார்.

ரிஸ்க் எடுக்க ரெடி: ஆனால், வெளியே அவர் படம் பண்ண முடியாத நிலையில், நான் பண்ணுவதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. அது உண்மையல்ல என விளக்கம் அளித்துள்ளார். ஓடிடி, சாட்டிலைட் உரிமைத் தொகை எல்லாம் இப்போ டோட்டலாக மாறிவிட்டது என்றும் அடுத்த மாதம் எஸ்டிஆர் 50 ப்ரோமோ ஷூட் இருக்கு அதுக்குத்தான் இதே கெட்டப்பில் இருக்கேன். மற்ற படங்களில் என்னுடைய கெட்டப் மாறும் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X