சிங்கிள் டேக் ஷாட்டில் அசத்திய சிம்பு.. மாநாடு நாயகி ட்வீட்!
சென்னை: சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், S.J. சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாநாடு.
Recommended Video
இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
மாநாடு படக்குழு ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் தொடர்ந்து அப்டேட்களை வழங்கி வருகிறது. சிங்கிள் டேக் ஷாட் குறித்து படத்தின் நாயகி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

கலக்கிய ரசிகர்கள்
முன்னதாக படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர் ஆகிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். மோஷன் போஸ்டரில் யுவனின் இசை பெரிதும் பாராட்டப்பட்டது. சிம்பு ரசிகர்களும் இதனை கொண்டாடினர்.

5 மொழிகளில்
கடந்த பிப்ரவரி மாதம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு மாநாடு படக்குழு படத்தின் டீசரை 5 மொழிகளில் வெளியிட்டது. பெரிய திரை பிரபலங்கள் டீசரை வெளியிட்டனர். படத்தின் டீசர் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எதிர்பார்ப்பையும் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பாக முதல் பாடலை ரம்ஜான் அன்று வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாயகி ட்வீட்
சிம்பு சிங்கிள் டேக் ஷாட்டில் நடித்ததை பார்த்து மிகவும் வியந்து பாராட்டியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். அந்த காட்சியில் எஸ்.ஜே. சூர்யா நடித்தது குறித்தும் பாராட்டியுள்ளார். இது குறித்து படத்தின் கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











