ஏப்ரல் மாதம் மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா வருகிறார்கள், பராக் பராக் பராக்
சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். படத்தில் ஸ்ரேயா, தமன்னா, மகத், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.

மதுரை மைக்கேல் மற்றும் அஷ்வின் தாத்தா கதாபாத்திரங்களுக்கு தனித்தனியாக டீஸர் வெளியிட்டனர். படத்தை கோடை கால விடுமுறையையொட்டி வெளியிட்டால் நல்ல வசூல் பார்க்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து படம் ஏப்ரல் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சிம்பு, யுவன் கூட்டணி நீண்ட காலம் கழித்து சேர்ந்துள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications