வந்துட்டான்யா மதுரை மைக்கேல்: 'ஏஏஏ' டீஸரே சும்மா அதிருதுல்ல!
சென்னை: சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் டீஸர் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயாவும், மற்றொரு சிம்புவுக்கு ஜோடியாக தமன்னாவும் நடிக்கிறார்கள்.

மூன்றாவது சிம்புவுக்கு ஜோடி இல்லையாம். இந்நிலையில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரையே சும்மா அதிர விட்டுள்ளனர்.
இசையாகட்டும், சிம்புவின் மதுரை மைக்கேல் கெட்டப்பாகட்டும், நச்சு வசனமாகட்டும் அனைத்தும் அருமை. சந்து கேப்பில் ஸ்ரேயா சிம்புவுக்கு லிப் டூ லிப் வேறு கொடுத்துள்ளார்.
சிம்பு மதுரை மைக்கேல் கதாபாத்திரத்தில் அம்சமாக உள்ளார். டீஸர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications