5 ஆண்டுகளை கடந்த அச்சம் என்பது மடமையடா.... சிம்பு ரசிகர்கள் குஷி!

சென்னை : நடிகர் சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ரிலீசான படம் அச்சம் என்பது மடமையடா.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் இந்தப் படம் வெளியானது.

தற்போது இந்தப் படம் 5 ஆண்டுகளை கடந்துள்ளது குறித்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு தொடர்ந்து காதல் கதைகளில் நடித்து வந்தார். தற்போது கமர்ஷியல் படங்களிலும் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், இம்மாத இறுதியில் மாநாடு படம் ரிலீசாக உள்ளது.

மாநாடு படம்

மாநாடு படம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு படத்திற்கு அனைத்து தரப்பினரிடையேயும் வரவேற்பு காணப்படுகிறது. தீபாவளிக்கு ரிலீசாக இருந்த நிலையில், அதிலிருந்து பின்வாங்கி இம்மாத இறுதியில் இந்தப் படம் வெளியாக உள்ளது. முன்னதாக படத்தின் டீசர், பாடல்கள் உள்ளிட்டவை ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளன.

அச்சம் என்பது மடமையடா படம்

அச்சம் என்பது மடமையடா படம்

இதனிடையே, கடந்த 2016 நவம்பர் 11ம் தேதி ரிலீசான சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் தற்போது ஐந்து ஆண்டுகளை கடந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றிருந்தது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு -கௌதம் மேனன் கூட்டணி படம் வெளியானது.

சிம்புவின் உடல்மொழி

சிம்புவின் உடல்மொழி

படித்து முடித்த இளைஞன் வாழ்க்கையில் நுழையும் வன்முறை அவனது வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவானது. சிம்புவின் உடல்மொழி படத்தில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. படித்த இளைஞனின் அழகான ஆசையில் அவர் அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

அழகான மஞ்சிமா மோகன்

அழகான மஞ்சிமா மோகன்

இவருக்கு இணையாக தங்கையின் தோழியாக வரும் மஞ்சிமா மோகன் இந்தப் படத்தில் கொள்ளை அழகாக இருந்தார். வழக்கம் போல கௌதம் மேனன் படங்களில் வரும் அழகான கதாநாயகியாக இவரும் வலம்வந்தார். அழகாக இருந்தது மட்டுமின்றி இவருக்கு படத்தில் நடிக்கவும் அதிகமான வாய்ப்புகள் இருந்தன.

5 ஆண்டு நிறைவு

5 ஆண்டு நிறைவு

படத்தின் பாடல்கள் ஏஆர் ரஹ்மான் இசையில் சிறப்பாக அமைந்திருந்தன. தள்ளிப் போகாதே பாடல் காட்சிப்படுத்தப் பட்டிருந்த விதம் அப்போது வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்ததையொட்டி மஞ்சிமா மோகன் தன்னுடைய ட்விட்டர் பக்க்ததில் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X