சிம்பிளாக நடைபெற்ற சிம்பு தம்பி திருமணம்.. 29ம் தேதி பிரமாண்ட வரவேற்பு!

குறளரசன் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.

சென்னை: இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசனின் திருமணம் எளிமையாக மணமகள் வீட்டில் வைத்து நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமையாளரான டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு, இளைய மகன் குறளரசன். இதில், சிம்பு தமிழின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார். குறளரசன், சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Simbus brother ties the knot as per Islam customs

இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் பெற்றோர் முன்னிலையில் இஸ்லாமுக்கு மாறினார்.

இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. மணமகள் வீட்டில் வைத்து எளிமையாக நடைபெற்ற இத்திருமணத்தில் சிம்பு மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் கலந்து கொண்டனர்.

நாளை மறுதினம் குறளரசனின் திருமண வரவேற்பு சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து நடைபெற இருக்கிறது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்றிருந்த சிம்பு, தம்பி திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பியுள்ளார். உடல் எடையைக் குறைத்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிம்பு விரைவில் மாநாடு' பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X