பிரம்மாண்ட படங்களில் கைக்கோர்க்கும் சிம்பு.. சூப்பரான லைன் அப்பா இருக்கே!

சென்னை : நடிகர் சிம்பு அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்களுடன் கைகோர்த்து வருகிறார். மாநாடு படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

அடுத்ததாக தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையடுத்து தற்போது பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு இணைந்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் வெளியீடாக ரிலீசாக உள்ளது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக மாறியுள்ளார். தன்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே நடித்துவரும் இவர், ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான இவரது மாநாடு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

வெந்து தணிந்தது காடு படம்

வெந்து தணிந்தது காடு படம்

டைம் லூப் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் சிம்புவின் நடிப்பில் முதிர்ச்சி காணப்பட்டது. சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் தற்போது சிம்பு நடித்து முடித்துள்ளார். செம்படம்பரில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

சிம்பு குறித்து கௌதம் மேனன் மகிழ்ச்சி

சிம்பு குறித்து கௌதம் மேனன் மகிழ்ச்சி

இந்தப் படத்தின் இயக்குநர் கௌதம் மேனன் தனது சமீபத்திய பேட்டியில் சிம்பு மிகவும் கம்பர்ட் ஆன ஆள் என்றும் அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே அடுத்ததாக பத்து தல படத்தின் சூட்டிங்கில் சிம்பு நேற்று முதல் பங்கேற்றுள்ளார்.

பெல்லாரியில் துவங்கிய சூட்டிங்

பெல்லாரியில் துவங்கிய சூட்டிங்

இந்தப் படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் சிம்பு நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்திற்கும் ஏஆர் ரஹ்மான்தான் இசையமைத்து வருகிறார். இதனிடையே நேற்றைய தினம் பெல்லாரியில் துவங்கிய இந்தப் படத்தின் சூட்டிங்கில் சிம்பு பகேற்றுள்ளார். இதன் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்தப்படத்தில் கௌதம் கார்த்திக்கும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர் சிம்புவிற்கு ஜோடியாகியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகவுள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

ஏஆர் முருகதாசுடன் இணையும் சிம்பு?

ஏஆர் முருகதாசுடன் இணையும் சிம்பு?

இதையடுத்து இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் சிம்பு கமிட்டாக உள்ளார். இந்தப் படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த வாரத்தில் சிம்பு, ஹன்சிகாவுடன் நடித்து வெளியான மஹா படமும் அவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X