சிம்புவின் குட்டி ரசிகை.. வெளியான வீடியோ.. லைக் போட்ட ஆத்மன்!

சென்னை : நடிகர் சிம்பு ஏராளமான ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளார். விஜய், தனுஷ் வரிசையில் இவருக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது இவர் சிறப்பான கதைக்களங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவரது மாநாடு படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது.

இரு தினங்களுக்கு முன்பு வெளியான வெந்து தணிந்தது காடு படமும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கேரியரை துவங்கியவர். இவரது தந்தை டி ராஜேந்திரன் சிறப்பான இயக்குநராக இருந்த நிலையில், தன்னுடைய மகனை குழந்தையாக இருந்தபோதே சினிமாவில் நடிக்க வைத்து விட்டார். தொடர்ந்து சிறுவனாக, இளைஞனாக தனது திரைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார் சிம்பு.

தொடரும் சர்ச்சைகள்

தொடரும் சர்ச்சைகள்

தன்னுடைய படங்களின் வெற்றியை போலவே இவருடன் சர்ச்சைகளும் தொடர்ந்துதான் வந்தன. அதையெல்லாம் கடந்து தற்போது தன்னுடைய மெச்சூர்ட்தனத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சிம்பு. கடந்த ஆண்டு இறுதியில் இவரது மாநாடு படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

டைம் லூப் கதைக்களம்

டைம் லூப் கதைக்களம்

இந்தப் படத்தில் டைம் லூப் கதைக்களமாக எடுக்கப்பட்டிருந்தது. சிறப்பான திரைக்கதையுடன் திரும்ப திரும்ப ஒரே காட்சிகளை எடுத்திருந்தார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தின் சிறப்பான உருவாக்கத்தில் நல்ல வகையில் கைக்கொடுத்திருந்தார் சிம்பு. அவரது நடிப்பு படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருந்தது.

100 கோடி கிளப்

100 கோடி கிளப்

அந்த வகையில் மாநாடு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இந்தப் படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 கேரக்டரை சிறப்பாக்கிய சிம்பு

கேரக்டரை சிறப்பாக்கிய சிம்பு

வெந்து தணிந்தது காடு படத்தில் கௌதம் மேனனின் சிறப்பான கதைக்களம் இருந்தாலும், அந்த கேரக்டருக்கு சிறப்பான உயிர் கொடுத்துள்ளார் சிம்பு. படத்தில் சிம்புவின் ஆக்டிங் மற்றும் ஏஆர் ரஹ்மானின் இசை இரண்டுமே பலத்தை கொடுத்து, வெற்றிப் படமாக்கியுள்ளது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

சிம்புவின் குட்டி ரசிகை

சிம்புவின் குட்டி ரசிகை

இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்தப் படத்திற்கு குட்டி ரசிகர் ஒருவர் சிறப்பாக ரியாக்ட் செய்து வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மௌரிகா என்ற அந்த 7 மாத குழந்தையின் பேவரைட் பாடலாக சிம்புவின் மறக்குமா நெஞ்சம் காணப்படுகிறது.

பாடலுக்கு சிறப்பான ரெஸ்பான்ஸ்

பாடலுக்கு சிறப்பான ரெஸ்பான்ஸ்

அந்தப் பாடலை டிவியில் போடும்போதெல்லாம், அந்த குழந்தை குதிக்கிறது, கால்களை நீட்டி உதைக்கிறது, பேச்சு வராத நிலையில், தன்னுடைய சத்தத்தால் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது. இதையடுத்து படத்தின் முதல் காட்சிக்கு அந்தக் குழந்தையின் தந்தை, அழைத்து சென்ற நிலையில், அங்கும் கைகளால் தாளம் போட்டு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

லைக் செய்த சிம்பு

லைக் செய்த சிம்பு

இந்த வீடியோவை அந்த குழந்தையின் தந்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோவிற்கும் குழந்தைக்கும் சிம்பு பாராட்டு தெரிவித்துள்ளார். லவ் உள்ளிட்ட எமோஜிக்களை பகிர்ந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக நடிக்கத்துவங்கிய சிம்புவிற்கு இந்தக் குழந்தையின் செயல்பாடு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X