செம ஸ்பீடு.. ஈஸ்வரன் ஷூட்டிங் ஓவர்.. டீசர் எப்போ தெரியுமா? அதிரடி அப்டேட் வெளியிட்ட சிம்பு!
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.
ஈஸ்வரம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என சமீபத்தில், நடிகர் சிம்பு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், டீசர் ரிலீஸ் குறித்த மாஸ் அப்டேட்டுடன் இப்போ சிம்பு ட்வீட் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

பாம்பு பிடிப்பவர்
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் மஹா படம் வருகிறதா? மாநாடு படம் வருகிறதா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சட்டென ஈஸ்வரனாக மாறி வரும் பொங்கலுக்கே வரப் போகிறார் சிம்பு. இந்த படத்தில் பாம்பு பிடிப்பவராக நடித்துள்ளாராம் சிம்பு.

மிரட்டல் ஃபர்ஸ்ட் லுக்
கழுத்தில் பாம்புடன் டைட்டிலுக்கு ஏற்றது போலவே சிம்பு ஈஸ்வரனாக காட்சி கொடுத்த ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. அதனை தொடர்ந்து, கையில் பேட் உடனும் இப்போ போடுறா பால என மோஷன் போஸ்டரில் சிம்பு கொடுத்த செகண்ட் லுக்கும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.

நியூ லுக்
ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து நடிகர் சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். நீண்ட தாடியுடன் படு ஸ்டைலாக இருக்கும் சிம்புவின் நியூ லுக்கை பார்த்ததும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு ரெடி ஆகி விட்டார் என கமெண்ட் அடித்து வந்தனர்.

ஷூட்டிங் ஒவர்
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு சூப்பரான ஹாட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளர்.

தீபாவளி விருந்து
ஈஸ்வரன் படத்தின் ஷூட்டிங் நிறைவான சூப்பரான அப்டேட்டை மட்டும் சொல்லாமல், வரும் தீபாவளிக்கு அந்த படத்தின் அசத்தலான டீசரும் ரிலீசாக போகிறது என்கிற அறிவிப்பையும் கூறி தனது ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார் சிம்பு.


Click it and Unblock the Notifications











