கங்கை அமரன் குடும்பத்திற்கு சிம்பு அனுப்பிய உருக்கமான இரங்கல் செய்தி

சென்னை : உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவி மணிமேகலை நேற்று இரவு காலமானார். அன்னையர் தினமான நேற்று இரவு 11.09 மணியளவில் டைரக்டரும் நடிகருமான வெங்கட் பிரபு மற்றம் நடிகர் பிரேம்ஜி அமரனின் தாயார் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Venkat Prabhu அம்மா Manimegalai காலமானார் | Gangai Amaran, Premji Amaran

இவரின் மறைவிற்கு கோலிவுட்டை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கங்கை அமரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு, கங்கை அமரனின் குடும்பத்திற்கு மிக உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.

Simbus emotional condolence message to Gangai Amaran family

அதில், அன்பு இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உட்பட என் சகோதர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். இதற்கு முன் நட்பாக இணைந்திருந்தாலும் இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் எனப் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக் கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும், குடும்பத்திற்கும், உங்களனைவருடனும், இழப்பையும்...வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கி வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தில் பிரேம்ஜியும் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X