பிரம்மா முகூர்த்தத்தில் வெளியான ஈஸ்வரன் பட டீசர்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் பட டீசர் இன்று அதிகாலை வெளியானது.
கலக்கலான கமர்சியல் காட்சிகளுடன் கலப்பான பழைய சிம்புவை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி தீபாவளியில் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் இயக்குனர்.
பக்கா கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த ஈஸ்வரன் படத்தின் டீசர் இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானதையடுத்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

பல்வேறு அப்டேட்கள்
நடிகர் சிம்பு எது செய்தாலும் அது வைரலாகி வரும் நிலையில் இப்போது இவர் சுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு அப்டேட்கள் பல மாதங்களாக இணையதளங்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ராக்கெட் வேகத்தில் நடித்து
சமீப காலமாகவே திரைப்படங்களில் அவ்வளவாக கவனம் செலுத்தாத சிம்புவை மீண்டும் பழையபடி திரைப்படங்களில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அடுத்தடுத்து திரைப்படங்களில் ராக்கெட் வேகத்தில் நடித்துக் கொடுத்து வருகிறார்.

பிரம்ம முகூர்த்தத்தில்
இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களில் பரபரப்பாக செயல்பட்ட ஈஸ்வரன் பட சூட்டிங் முற்றிலும் முடிந்து டப்பிங் வேலைகளும் முடிந்து தீபாவளியான இன்று டீசர் வெளியாகும் என அப்படக்குழு அறிவித்திருந்ததையடுத்து இன்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் டீசர் வெளியானது.

சூப்பர்ஹிட் திரைப்படத்துக்கான‘
கையில் கிரிக்கெட் பேட் மற்றொரு கையில் சொடக்கு போட்டு கொண்டு செம மாஸாக ஆரம்பித்த இந்த டீசர் ரசிக்க வைக்கும் பல கமர்சியல் வசனங்களுடன், சென்டிமெண்ட் காட்சிகள், காட்சிக்கு காட்சி குதூகலமாக துள்ளலுடன் வந்து செல்லும் சிம்பு, கையில் வேலுடன் நெற்றியில் அம்சமாக திருநீறு பூசிக் கொண்டு பல மாஸான காட்சிகளில் வந்து செல்ல பாரதிராஜாவுடன் இவர் இருக்கும் காட்சிகள், மற்றும் ஆக்ரோஷமான சில காட்சிகள் என ஒரு சூப்பர்ஹிட் திரைப்படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டதாக இதன் டீசர் இருந்தது.

யூடியூபில் ட்ரெண்ட்டிங்கில்
கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்திற்கு பிறகு சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், தீபாவளி ஸ்பெஷல் பரிசாக வெளியிடப்பட்ட இந்த ஈஸ்வரன் பட டீசர் அனைவரையும் வெகுவாக கவர்ந்து உள்ளதை அடுத்து, இப்பொழுது யூடியூபில் ட்ரெண்ட்டிங்கில் உள்ளது. பொங்கல் பரிசாக படமும் ஆன் தி வே!


Click it and Unblock the Notifications











