இவன் கேங்ஸ்டர் இல்ல ரியல் மான்ஸ்டர்... பதற வைக்கும் சிம்புவின் பத்து தல ஸ்டில்ஸ்
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள இந்தப் படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னதாக பத்து தல படத்தில் இருந்து ஏஆர் ரஹ்மான் இசையில் அவரே பாடியிருந்த நம்ம சத்தம் என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிருந்தது.
இதனையடுத்து தற்போது இந்தப் படத்தின் ஹீரோ சிம்புவின் செம்ம மாஸ்ஸான ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிம்புவின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ்
சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து இந்தப் படம் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதமே பத்து தல வெளியாகிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிம்புவின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டர்களை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ரியல் மான்ஸ்டர் சிம்பு
ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் கிருஷ்ணா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகதான் பத்து தல உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே ஏஜிஆர் கேரக்டரின் டீசர் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியான சிம்புவின் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்ஸ் படுமிரட்டலாக உள்ளன. இந்த போஸ்டர்களைப் பார்த்த ரசிகர்கள், சிம்பு ரியல் மான்ஸ்டராக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ட்ரெண்டாகும் போஸ்டர்ஸ்
ஒரு போஸ்டரில் வாயில் நீளமான கத்தியுடன் வெறித்தனம் காட்டுகிறார் சிம்பு. அதேபோல், இன்னொரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் வெறித்தனமாக லுக் விடுகிறார். அடுத்ததாக வெளியான போஸ்டரில் கேங்ஸ்டர் கெத்தோடு கம்பீரமாக அமர்ந்திருக்கார். அதுவரை கேங்ஸ்டராக இருக்கும் சிம்பு, இன்னொரு போஸ்டரில் ஹெலிஹாப்டரில் இருந்து இறங்கி மான்ஸ்டராக என்ட்ரி கொடுக்கிறார். அடுத்ததாக கையில் மெஷின் கன்னோடு அதகளம் செய்கிறார். இன்னொரு போஸ்டரில் முஸ்லிம் இளைஞரைப் போல தலையில் தொப்பியுடன் நடந்து வருகிறார். இந்த போஸ்டர்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகின்றன.

விரைவில் ட்ரெய்லர் வெளியீடு
இந்நிலையில், பத்து தல படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மானும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பத்து தல படத்தின் ப்ரோமோ வீடியோவாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பிகில் படத்தில் சிங்கப் பெண்ணே பாடலில் விஜய், அட்லீயுடன் ஏஆர் ரஹ்மானும் ஒரு காட்சியில் என்ட்ரி கொடுத்திருப்பார். தற்போது அதேபோல் பத்து தல படத்தில் ஒரு சீனில் மாஸ் காட்டப் போகிறாராம் ஏஆர் ரஹ்மான். இதுகுறித்து விரைவில் அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பத்து தல படத்தில் சிம்பு மணல் மாஃபியாவாக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏ.ஆர் அமீன் குரலில் பாடல்
பத்து தல படத்தில் இருந்து வெளியான 'நம்ம சத்தம்' என்ற பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியிருந்தார். சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலை ரஹ்மானின் மகன் ஏஆர் அமீன் பாடியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஓக்கே கண்மணி படத்தில் இடம்பெற்ற 'மவுலானா' பாடல் மூலம் திரை பாடகராக அறிமுகமானவர் ஏஆர் அமீன். சமீபத்தில் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்து வரும் அமீன், சிம்புவுக்காகவும் குரல் கொடுத்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











