Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பரபரக்கும் ஷூட்டிங்.. சுசீந்திரன் இயக்கும் படம்.. சிம்பு பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? படக்குழு தகவல்
சென்னை: சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி கசிந்துள்ளது.
நடிகர் சிம்பு, மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கும் படம் இது.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சிம்பு ஜோடியாக நடிக்கிறார்.
வேண்டாம்கா கிளாமர்.. துபாய் நீச்சல் குளத்தில் பிரியா பவானி சங்கர்.. வைரல் போட்டோஸ்.. கெஞ்சும் பேன்ஸ்
நவம்பரில் மீண்டும்
எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி, கருணாகரன் உள்பட பலர் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதற்கு முன்பு வரை, இதன் ஷூட்டிங் நடந்து வந்தது. பின்னர் லாக்டவுனால், இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு, நவம்பரில் மீண்டும் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிராமத்துப் பின்னணி
இதற்கிடையே சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சிம்பு. இது குறுகிய கால படம் என்று கூறப்படுகிறது. கிராமத்துப் பின்னணியை கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங், திண்டுக்கல்லில் சில நாட்களுக்கு முன் தொடங்கி நடந்து வருகிறது.
சிம்பு ஜோடியாக
30 நாட்களில் படத்தை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதை, ஜீரோ, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களைத் தயாரித்த மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் ஆகி இருக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். சிம்பு ஜோடியாக, நிதி அகர்வால் நடிக்கிறார்.
முன்னா மைக்கேல்
இவர், லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தியில், முன்னா மைக்கேல் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவர். படத்துக்கு இசை அமைப்பாளராக, எஸ்.எஸ். தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, சிம்பு நடித்துள்ள ஒஸ்தி, வாலு படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
விஜயதசமி அன்று
இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் 26 ஆம் தேதி விஜயதசமி அன்று படக்குழு வெளியிடுகிறது. இதில் சிம்பு ஸ்லிம்மாக, வேற லெவலில் இருப்பார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சிம்பு ரசிகர்கள் இப்போதே அதை கொண்டாட ஆர்வமாக இருக்கின்றனர்.