தாறுமாறான ஒர்க் அவுட்...மீண்டும் வைரலாகும் சிம்புவின் வீடியோ
சென்னை : சிம்பு சமீப காலமாக தனது தோற்றத்தை பல விதங்களில் முற்றிலுமாக மாற்றி வருகிறார். 2019 ல் 103 கிலோவாக இருந்த உடல் எடையை 30 கிலோ குறைத்துள்ளார் சிம்பு. தற்போது மீண்டும் பிட்டான, யூத் தோற்றத்திற்கு திரும்பி உள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தன்னுடைய டோட்டோக்கள், வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர் சிம்பு. சமீப காலமாக அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது பயிற்சியாளர் தனக்கு பயிற்சி கொடுக்கும் ஒர்க் அவுட் வீடியோவை சிம்பு பதிவிட்டுள்ளார். அதில், சிம்பு வெயிட் தூக்குவது போன்றும், அதனை பயிற்சியாளர் எண்ணுவது போன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.
வீடியோவின் முடிவில் சிம்புவிடம், லைவ்லி என பயிற்சியாளர் கூறுகிறார். வலியுடன் எடையை தூக்கிக் கொண்டிருந்த சிம்பு, இது உங்களுக்கு லவ்லி. எனக்கு இல்லை என சொல்லி விட்டு நடந்து செல்கிறார்.
சிம்பு பதிவிட்ட இந்த ஒர்க் அவுட் வீடியோவை இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பார்த்து, லைக் செய்துள்ளனர். 2000 பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். இதில் பலர் சிம்புவின் அர்ப்பணிப்பை பாராட்டியும், சிலர் மன்மதன் கேட்அப்பில் திரும்பி வா என்றும் கூறி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











