திருமணத்தில் மிங்கிளாகாத நட்சத்திரங்கள்.. மணக்கோலத்தில் பார்க்க காத்திருக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: சினிமா உலகில் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ உச்சம் தொடும் தருணத்திலேயே, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்புகளும் அதிகரிக்கத் தொடங்கும். குறிப்பாக "திருமணம் எப்போது?" என்ற கேள்வி, ரசிகர்களிடமும் ஊடகங்களிடமிருந்து எழும். இவை அனைத்தையும் தாண்டி, திருமணம் செய்து கொள்ளாமல் இன்னும் திருமணத்தில் மிங்கிளாமல் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அந்த நடிகர்கள் பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

திருமணமாகாத நடிகர்கள் என்று வாதம் வந்ததுமே அதில் முதலிடத்தில் பிடிப்பவராக இருந்தார் பிரேம்ஜி. ஆனால், தற்போது திருமணம் செய்து கொண்டு குழந்தைக்கும் தந்தையாகி குடும்பஸ்தனாக மாறி இருக்கிறார். அடுத்து சினிமா ரசிகர்கள் அனைவரும் எப்போது திருமணம் என கேட்கும் நடிகராக சிம்பு இருக்கிறார். பல விதமான சர்ச்சைகள், காதல் தோல்விகளில் இருந்து மீண்டு தற்போது எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அண்மையில் அளித்த பேட்டியில், காதல் என்னை ஏமாற்றவில்லை, காதலித்தவர்கள் தான் என்னை ஏமாற்றினார்கள். அந்த ஏமாற்றம் தான் என்னை பக்குவமாக்கியது என்று பேசி இருந்தார்.

எஸ்.ஜே.சூர்யா: அடுத்ததாக திருமணம் செய்து கொள்ளாத நடிகர் லிஸ்ட்டில் இருப்பவர் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக பல வெற்றிப்படத்தை கொடுத்த இவர் நடிகராக களமிறங்கி தற்போது அதிரடியாக பல படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்து வருகிறார். அவர் திருமணம் எனக்கு ஒரு அவசியமாகவே தோன்றவில்லை. "எனக்கு சினிமாவே வாழ்க்கை" என்ற அவரது வெளிப்படையாகவே கருத்து கூறி இருக்கும் இவர், சிங்கிளாகவே இருக்க முடிவு செய்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.

விஷால்: அதிரடி ஆக்ஷன் ஹீரோ விஷாலின் திருமணம் குறித்த செய்திகள் பலமுறை வெளிவந்துள்ளன. நடிகர் விஷாலுக்கு 2019 ஆம் ஆண்டு அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், அது திருமணம் வரை செல்லாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. அதன் பின் ரசிகர்கள் அனைவரும் விஷாலிடம் எப்போது திருமணம் என தொடர்ந்து கேட்டுவந்ததால், நடிகர் சங்க கட்டிடம் கட்டியதும் திருமணம் என அறிவித்து இருந்தார். இதைடுத்து அவருக்கு ஆகஸ்ட் மாதம் நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அடுத்த ஆண்டு விஷாலை நிச்சயம் ஒரு கும்பஸ்தனாக இருப்பார்.

Actor actress unmarried actress
Photo Credit:

பிரபாஷ், அனுஷ்கா: பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக மாறி இருக்கிறார் பிரபாஷ். 46 வயதான பிரபாஸ் தற்போது வரைக்கும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். இவர் பாகுபலி திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டியுடன் இணைந்து நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. ஆனால், அதன் பிறகு திருமணம் இவர்களின் குறித்து எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஒவ்வொரு வருடமும் பிரபாஷின் படம் வெளியாகும் போது. ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு கேட்டு அலுத்துப்போய்விட்டார்கள். அதேபோல, அனுஷ்கா ஷெட்டிக்கும் தற்போது 44 வயதாகிறது. இவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

த்ரிஷா: தமிழ் சினிமாவில் எவர்கிரீன் நடிகையாக இருக்கிறார் திரிஷா. தற்போது த்ரிஷாவிற்கு 42 வயதாகிறது. அப்படி இருந்த போதும், இன்றைய காலத்து இளம் நடிகைகளுக்கு டாப் கொடுக்கும் வகையில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். த்ரிஷாவிற்கு தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம். ஆனால், இருவரும் நிச்சயதார்த்ததுடன் தங்களது உறவை முறித்துக் கொண்டனர். அதன்பின் பல சர்ச்சைகளில், திருமண வதந்திகளை த்ரிஷா சந்தித்து வருகிறார். திருமணம் பற்றி கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த த்ரிஷா, எனக்கு திருமண பந்தத்தில் நம்பிக்கை இல்லை. கல்யாணம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி, அது பற்றி எனக்கு கவலை இல்லை என்றார். அதே போல நடிகை தமன்னா, நடிகை தபு போன்ற நடிகைகளும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் வாழ்க்கை மகிழ்ச்சியாக ரசித்து வாழ்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: actor actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X