சிம்பு.. திரிஷாவின் கார்த்திக் டயல் செய்த எண்.. அழகான காதலை சொல்லும் குறும்படம்!

சென்னை : கார்த்திக் டயல் செய்த எண் என்ற விண்ணைத் தாண்டி வருவாயா சீக்குவன்சில் ஷார்ட் பிலிமின் டீஸர் வெளியானது. அதில் த்ரிஷா கார்த்தியிடம் பேசுவது மட்டும் வெளிவந்து நல்லா வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அந்த குறும்படம் வெளியாகி உள்ளது.

Recommended Video

Karthik Dial Seytha Yenn - மரண கலாய் செய்யும் நெட்டிசன்ஸ்

விண்ணைத் தாண்டி வருவாயா இந்த படத்திற்காக தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கும் நிலையில், இந்த குறும்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் அவர்கள் தனது யூட்யூப் சேனலில் இப்போது வெளியிட்டு இருக்கிறார்.

அதில் கார்த்திக் தனது காதலி ஜெஸ்ஸி நீண்ட வருடங்களுக்கு பின் அவரது சொந்த ஊரான ஆழப்புழா வந்திருப்பது அவரின் அக்கா முகநூல் புத்தக பதிவின் மூலமாக அறிந்து அவருக்கு அழைத்து பேசுவார்.

 ஏக்கத்தில் கார்த்திக்

ஏக்கத்தில் கார்த்திக்

ஓப்பனிங் ஷாட்டிலேயே அவர் ஒரு கதையை எழுத ஆரம்பித்து அதில் திவ்யா என்ற கதாபாத்திரத்தை எழுத முடியாமல், என்ன செய்வது என தெரியாமல் தனது முன்னாள் காதலி ஜெஸ்ஸிக்கு அலைப்பேசியில் அழைத்து பேசுவார் ஹாண்ட்சம் லுக்கில் இருக்கும் கார்த்திக்(simbu).

 ஐ லவ் யூ ஜெஸ்ஸி

ஐ லவ் யூ ஜெஸ்ஸி

இப்படி நீண்ட நாட்கள் கழித்து இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, தியேட்டர்கள் அனைத்தும் மூடிவிட்டனர் இப்போது என்ன செய்வது என தெரியவில்லை, படப்பிடிப்பு தொடங்கவே இன்னும் பல நாட்கள் ஆகும் என பேசிக்கொண்டு இருக்கையில் திடீரென கார்த்திக் எனக்கு நீ வேணும் ஜெஸ்ஸி என சொல்வார், அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஜெஸ்ஸி நான் இருக்கேன் கார்த்திக் என பட்டும் படாமல் சொல்வார், அதற்கு கார்த்திக் மீண்டும் எனக்கு நீ வேணும் ஜெஸ்ஸி என்னை காதலிக்கிறேன் என சொல் என்பார்.

 உன் காலில் கிடக்க ஆசை

உன் காலில் கிடக்க ஆசை

நான் இப்போது உன் முன் ஒரு ஆணாக கேட்கிறேன் ஒரு பெண்ணனாக நீ சொல்லு என கார்த்திக் கேட்க, நான் இப்போது உன்னை காதலிப்பதாக சொன்னால் உலகம் முழுவதும் உள்ள கொரோனா போய்டுமா என ஜெஸ்ஸி கேக்க, சொல்லித்தான் பாரேன் என்று கார்த்திக் வெக்கத்துடம் இருக்கும்போது, மனதில் இருந்து சொல்லாமல் உதட்டிலிந்து சொல்கிறேன் ஐ லவ் யூ கார்த்திக் என்பார் ஜெஸ்ஸி.

 என்னோட மூணாவது குழந்தை

என்னோட மூணாவது குழந்தை

தனக்கும் தனது கணவர் ராய்யும் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் புரிந்து கொள்ளவே ஆரம்பித்தோம் ஆவர் ரொம்ப நல்லவர், இப்போ கூட நான் உன்கிட்ட தான் பேச போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன் என்பவர். அவர் என்ன முழுவதும் நம்புகிறார். நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் நீ எனக்கு மூணாவது குழந்தை மாதிரி என்பர் ஜெஸ்ஸி. எனக்கு இப்போ உன்மேல் இருப்பது லவ் தான் ஆனால் நீ நினைக்கிற மாதிரி லவ் இல்ல என்பதற்கு தலையாட்டியபடியே யூ சட்ச பிட்ச் ஜெஸ்ஸி என்பார் கார்த்திக்.

 பீல் செய்த கார்த்திக்

பீல் செய்த கார்த்திக்

ஒரு கட்டத்தில் ஜெஸ்ஸி மௌனராகம் படத்தின் வசனம் போல பேச. மணி சார் கடைசியில எனக்கே ஆப்பு வெச்சிடிங்கலே என feel செய்வார் கார்த்திக். நமக்கு ஆப்பு வைக்க வேறு யாரும் தேவையில்லை உனக்கு நானும் எனக்கு நீயும் போதும் என்பார் அதற்கு கார்த்திக் நீ சொன்னது கரெக்ட் தான் ஜெஸ்ஸி நீ எனக்குள்ள ஏதோ பண்ற என்பார்.

 நம்பிக்கையுடன் கார்த்திக்

நம்பிக்கையுடன் கார்த்திக்

உன்கிட்ட பேசுனதுக்கு அப்புறம் எனக்கு இப்போ நான் மிகவும் மென்மையாக உணர்கிறேன் என்பார் கார்த்திக். அதற்கு குட் நீ எழுது உன்னோட எழுத்தில் அவளோ அழகு இருக்கு நீ ஒன்னும் கவலை படாதே சீக்கிரமே படப்பிடிப்புகள் தொடங்கும் தியேட்டர்கள் திறக்கும் உனக்கும் வழி பிறக்கும் என கார்த்திக்கு நம்பிக்கையூட்டுவார் ஜெஸ்ஸி.

 சந்தோசத்தில் கார்த்திக்

சந்தோசத்தில் கார்த்திக்

பின் அந்த வார்த்தையை சொல்லாமலே போகிறாய் என்பதற்கு, எனக்கு தெரியும் உனக்கான ஒருத்தி இருக்க அவள் பெயர் ஜெஸ்ஸி என, இல்லை இனிமேல் நான் அந்த வார்த்தையை சொல்லமாட்டேன் அதற்கு இனி எங்கும் வாய்ப்பில்லை புதுசா ஏதாவது ட்ரை பண்ணு நீ போய் எழுது என சொல்லி விட்டு இருவரும் சந்தோசமா தனது அழைப்பை முடித்தனர். கார்த்திக் ஜெஸ்ஸியிடம் பேசிய சந்தோசத்தில் இப்போ பேசிய உரையாடலை அடுத்த கதைக்கு எழுத ஆரம்பிப்பார். முடிவில் தனது அடுத்த கதையை காதம்பரி என்ற கதாபாத்திரம் கொண்டு ஆரம்பிப்பார் கார்த்திக்.

 ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மகிழ்ச்சி

ரொம்ப நாட்களுக்கு பிறகு தனது பேவரைட் ஹீரோவை படத்தில் பார்த்தது அதுவும், விண்ணைத் தாண்டி வருவாயாவின் தொடர்ச்சியில் பார்த்ததில் சில ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், பல ரசிகர்கள் என்னோடா தலைவன இப்பிடியா ஒரு ஷார்ட் பிலிம்ல பாக்கணும் என வேதனையுடன் உள்ளனர். இன்னும் சிலர் இந்த ஷார்ட் பிலிமை பார்க்கும் போது ஏதோ கள்ளக்காதல் கதை போன்று உள்ளது என கலாய்த்தும் வருகின்றனர். எது எப்படியோ கடைசியாக இதை சிம்பு நடித்து கொடுத்து விட்டார். அடுத்து மாநாடு படத்திற்காக வெய்ட்டிங் என பூரிப்புடன் சொல்கிறனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X