இந்த பக்கம் துப்பாக்கி.. பின்னணியில் கலவரம்.. சிம்புவின் மாநாடு பர்ஸ்ட் லுக்..படக்குழு ஜில் அப்டேட்
சென்னை: சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது.
Recommended Video
சிம்புவின் மாநாடு குறித்த அப்டேட்டை வெளியிடப் போவதாக, இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த அப்டேட்டை காண அதிக ஆவலாக இருந்தனர்.

மிக மிக அவசரம்
நடிகர் சிம்பு, வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' படங்களைத் தயாரித்தவர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அப்துல் காலிக் சிம்பு
இதில், சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உள்பட பலர் நடிக்கின்றனர். இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு.

தற்காலிக நிறுத்தம்
படத்துக்காக உடல் எடையை அவர் குறைத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், புதுச்சேரியில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.

ரொம்ப குசும்பு
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று காலை 09:09 மணிக்கு அவர் நடித்த நெற்றிக்கண்' டீசர் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் மாநாடு அப்டேட்டை வெளியிட இருப்பதால் ரசிகர்கள், ரொம்ப குசும்பு உங்களுக்கு என சோசியல் மீடியாவில் கமென்ட் செய்திருந்தனர். இந்நிலையில் அப்டேட் இன்று வெளியிடப்பட்டது.

பின்னணியில் கலவரம்
அதன்படி, மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அன்று காலை 10:44 மணிக்கு வெளியாகிறது பர்ஸ்ட் லுக். அந்த அறிவிப்பு போஸ்டரே மிரட்டலாக இருக்கிறது.

நாங்க வெயிட்டிங்
அதில், நமாஸ் செய்துகொண்டிருக்கிறார் சிம்பு. அருகில் துப்பாக்கி. பின்னணியில் கலவரம் நடக்கிறது. கையில் உருட்டைக் கட்டைகளுடன் சிலர் ஓடுவது போல இருக்கிறது. இந்த அறிவிப்பு போஸ்டரை சிம்பு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள், நாங்க வெயிட்டிங் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











