11 நாட்களில் இத்தனை கோடிகளா? உலகம் முழுக்க வசூலை வாரி குவித்த மாநாடு.. எவ்வளவுன்னு பாருங்க!
சென்னை: மாநாடு திரைப்படம் 11 நாட்களில் குவித்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியாதர்ஷன் நடித்திருந்தார்.
மேலும் எஸ்ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

அரசியல் ஆக்ஷன் படம்
மாநாடு திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பெரும் போராட்டத்துக்கு பின்னர் கடந்த 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. அரசியல், ஆக்ஷன் படமான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிம்புவுக்கு வாய்ப்பு
சமூக வலைதளங்களிலும் படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் மாநாடு திரைப்படம் வசூலையும் குவித்து வருகிறது இப்படம். மாநாடு படம் பெரும் ஹிட்டானதை தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

ரூ. 70 கோடி வசூல்
இந்நிலையில் மாநாடு திரைப்படம் 11 நாட்களில் உலகம் முழுவதும் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 11 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாயை வசூலித்துள்ளது மாநாடு திரைப்படம்.

சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி
இதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 5 படங்களின் பட்டியலில் மாநாடு திரைப்படமும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு திரைப்படத்தின் வசூல் குறித்த இந்த தகவலால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய படத்தில் சிம்பு
நடிகர் சிம்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குநர் நந்தா பெரியசாமியின் படத்திலும் கமிட்டாகியுள்ளார். தற்போது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மேலும் ஒரு புதிய படத்தில் நடிகர் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











