மாநாடு படம் இந்த நாளில்தான் ரிலீஸ் ஆகிறது? தேதி குறித்த படக்குழு.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: மாநாடு படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒப்பந்தமான படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.
சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.

ஈஸ்வரன் படம்
இந்நிலையில் மீண்டும் பழைய நிலை திரும்பியிருப்பதை தொடர்ந்து மாநாடு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்குள்ளேயே நடிகர் சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து அந்த படமும் ரிலீஸ் ஆகிவிட்டது.

அப்துல் காலிக்காக..
இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 25 கிலோ வரை எடையை குறைத்து பழைய சிம்புவாக மாறியிருந்தார். இந்நிலையில்
மாநாடு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரிலீஸ் குறித்த தகவல்
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது மாநாடு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு திரைப்படம் வரும் ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது.

மொத்தம் 4 மொழிகளில்
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞராக நடித்துள்ளதால் இந்தப் படத்தை ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்வது பொருத்தமாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











