twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்தியன் 2' விபத்து எதிரொலி... உஷாரான சிம்புவின் மாநாடு பட குழு.. என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!

    By
    |

    சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, சிம்புவின் மாநாடு படக்குழு உஷார் நடவடிக்கை எடுத்துள்ளது.

    Recommended Video

    T. Rajendar press meet | Rajini - Kamal | Film Distributors Association

    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான படம் 'இந்தியன்'. இதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார்.

    சித்தார்த், நெடுமுடிவேணு, காஜல் அகர்வால், ரகுல் பிரீத்சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

    சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் பாடகி நடிகை அந்த ஹீரோவுக்குதான் செலவு பண்றாராம்.. ரொம்ப வெவரம்தான்!சம்பாதிக்கிற பணத்தையெல்லாம் பாடகி நடிகை அந்த ஹீரோவுக்குதான் செலவு பண்றாராம்.. ரொம்ப வெவரம்தான்!

    ஈவிபி பிலிம் சிட்டி

    ஈவிபி பிலிம் சிட்டி

    இதன் ஷூட்டிங் நசரத்பேட்டை அருகேயுள்ள, ஈவிபி பிலிம் சிட்டியில் செட் அமைத்து நடந்து வந்தது. கடந்த 19 ஆம் தேதி இரவு சண்டைக் கலைஞர்கள் மற்றும் அரங்கம் அமைப்பவர்கள் பணியில் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ராட்சத கிரேன்களில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கொண்டிருந்தன. அப்போது திடீரென கிரேன் கீழே விழுந்தது.

    3 பேர் உயிரிழப்பு

    3 பேர் உயிரிழப்பு

    இதில், உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்களை சேர்த்தனர். இதையடுத்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    பாதுகாப்பு ஏற்பாடுகள்

    இந்தச் சம்பவம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்புகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் படப்பிடிப்புகளில் மட்டுமே பெப்சி தொழிலாளர்கள் கலந்துகொள்வார்கள் என்று கூறியிருந்தார்.

    மாநாடு படக்குழு

    மாநாடு படக்குழு

    இந்நிலையில் படங்களுக்கு காப்பீடு செய்வது பற்றியும் கூறப்படுகிறது. இது பொதுவான விஷயம்தான் என்றாலும் பெரும்பாலான படங்கள் காப்பீடு செய்வதில்லை. இப்போது அதை செய்வதற்கு படங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. சிம்புவின் மாநாடு படக்குழு ரூ.30 கோடிக்கு காப்பீடு எடுத்துள்ளது. இதுபற்றி மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, 'உண்மைதான். காப்பீடு எடுப்பது வழக்கமானதுதான். இந்தப் படத்துக்கு ரூ.30 கோடிக்கு காப்பீடு எடுத்துள்ளோம்' என்றார்.

    English summary
    Simbu's Maanaadu team has insured their movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X