ஐதராபாத் செல்கிறது சிம்புவின் 'மாநாடு' டீம்... மெகா ஷெட்யூல்... ஒன்றரை மாதம் ஷூட்டிங்காம்!

By

Recommended Video

Maanadu Shooting Started Today | STR's Mass Comeback For Maanadu | Venkat Prabhu | Suresh Kamatchi

சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு பட ஷூட்டிங், ஐதராபாத்தில் இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் பூஜை மற்றும் படப்படிப்பு கடந்த வருடம் தொடங்கிய வேகத்திலேயே நின்றது. இதனால், படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சிம்பு, இந்தப் படத்தில் நடிப்பார் என்றும் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வருவார் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. நடிகர் சிம்பு, சபரிமலைக்கு மாலை போட்டதால் அவர் மலைக்கு சென்று திரும்பிய பிறகு படத்தின் வேலைகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

அதன்படி, படத்தின் ஷூட்டிங் சென்னையில் நேற்று அமைதியாகத் தொடங்கியது. இயக்குனர் சேரன் கிளாப் அடித்தும், சீமான் கேமராவை ஆன் செய்தும் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர். இதில் இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன்

இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், மனோஜ், டேனியல் உட்பட பலர் நடிக்கின்றனர். சிம்பு அப்துல் காலிக் என்ற பெயரில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இப்போது நடக்கும் படப்பிடிப்பு, விரைவில் முடிகிறது.

ஐதராபாத்

ஐதராபாத்

இதையடுத்து வரும் 28 ஆம் தேதி, மாநாடு படக்குழு ஐதராபாத் செல்கிறது. அங்கு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் சுமார் ஒன்றரை மாதம் ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்குகொள்கின்றனர். அங்கு முடிந்ததும் கோவையில் இதன் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X