தயாராகுங்கள் அப்துல் கலீக் வெர்சஸ் தனுஷ்கோடி... நவம்பர் 25 ல் மாநாடு ரிலீஸ்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அதிகம் எதிர்பார்க்கப்படும் அரசியல், த்ரில்லர் படமான இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் பேனரில் தயாரித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Recommended Video

Simbu குடும்பமே சேர்ந்து என்ன ஏமாத்திட்டாங்க AAA Producer Michael Rayappan அதிரடி

கல்யாணி பிரியதர்ஷன் லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

2019 ல் அறிவிப்பு

2019 ல் அறிவிப்பு

2019 ம் ஆண்டு மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு, 2020 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பக்கட்ட ஃபோட்டோகிராஃபி நடத்தப்பட்டது. முதல் கட்டமாக ஐதராபாத்தில் 40 நாட்கள் ஷுட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அது முடியாமல் போனதால் சென்னையில் முதல் கட்டமாக பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. பிறகு மார்ச் மாதம் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

ஆனால் கொரோனா பரவல், லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு ஆரம்பித்த உடனேயே நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, 2021 ம் ஆண்டு ஜுலை மாதம் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டது. முன்னதாக சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

முதலில் மே 14 ம் தேதி ரம்ஜான் தினத்தன்று மாநாட படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை, தியேட்டர்கள் மூடல் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இருந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்த, படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவைகள் வெளியிடப்பட்டன.

தீபாவளி ரிலீஸ் வாபஸ்

தீபாவளி ரிலீஸ் வாபஸ்

பிறகு ஆயுத பூஜை, அக்டோபர் 2 ஆகிய தினங்களில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இறுதியாக தீபாவளியான நவம்பர் 4 ம் தேதி மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், ரஜினியின் அண்ணாத்த படத்துடன் சிம்புவின் மாநாடு மோத உள்ளதாக கூறப்பட்டது. பிறகு படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்படுவதாக கூறப்பட்டு, மாநாடு தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியது. அதே சமயம் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலர் இடையூறு செய்து வருவதாக சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் ஓப்பனாக குற்றம்சாட்டினார்.

சதி வேலை செய்கிறார்கள்

சதி வேலை செய்கிறார்கள்

மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்வதற்காக பல சதி வேலைகள் நடப்பதாக உஷா ராஜேந்தரும் கூறிய நிலையில், நவம்பர் 25 ம் தேதி மாநாடு படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தற்போது கூறப்படுகிறது. ஆனால் ரிலீஸ் தேதி பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரப்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

நவம்பர் 25 ரிலீசா

நவம்பர் 25 ரிலீசா

இந்நிலையில் டைரக்டர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தயாராகுங்கள் அப்துல் கலீக் வெர்சஸ் தனுஷ்கோடி என்ற கேப்ஷனுடன் மாநாடு படத்தில் சிம்பு - எஸ்.ஜே.சூர்யா மோதிக் கொள்ளும் ஸ்டில் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனால் நவம்பர் 25 ம் தேதி தியேட்டர்களில் மாநாடு படம் ரிலீஸ் செய்யப்படும் என்பது கிட்டதட்ட முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X