கூட்டத்திற்கு நடுவே துப்பாக்கியுடன் சிம்பு.. மாநாடு மோஷன் போஸ்டர் ரிலீஸ் !

சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்த திரைப்படங்கள் சிம்புவுக்கு வெளியாக இருக்கும் நிலையில் இப்பொழுது அரசியல் திரைப்படமாக உருவாகிவரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரு விரு வேகத்தில் நடந்து வருகிறது.

மாநாடு படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் இப்பொழுது அல்வா போல படக்குழு வெளியிட்டுள்ள மாநாடு ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இணையதளத்தில் தெறிக்க விட்டு வருகிறது.

தள்ளிப் போய்க் கொண்டே

தள்ளிப் போய்க் கொண்டே

ட்ரெண்டிங் திரைப்படங்களை இயக்குவதில் புகழ் பெற்றவரான வெங்கட்பிரபு முறையாக சிம்புவுடன் இணைந்து பணியாற்றி வரும் மாநாடு திரைப்படம் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடக்க இருந்து ஒவ்வொரு முறையும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது ரசிகர்களை பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.

பெரிய பட்டாளமே

பெரிய பட்டாளமே

சிம்பு இதுவரை இல்லாத அளவிற்கு முதல்முறையாக அரசியல் சம்மந்தப்பட்ட மாநாடு திரைப்படத்தில் அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவர கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா என மிகப் பெரிய பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.

மாநாடு ஃபர்ஸ்ட் லுக்

மாநாடு ஃபர்ஸ்ட் லுக்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்போது வெளியாகியிருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து மாநாடு வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக மாநாடு ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வெளியிட்டு அட்டகாச படுத்தியுள்ளது படக்குழு.

சிம்புவின் ஆட்டம் இனிமேதான் ஆரம்பம்

சிம்புவின் ஆட்டம் இனிமேதான் ஆரம்பம்

சிம்புவின் அப்துல் காலிக் லுக் வைரலான நிலையில் இப்பொழுது வெளியாகி இருக்கும் ஃபர்ஸ்ட் லூக் மோஷன் போஸ்டரில் மிகப்பெரிய அரசியல் கட்சி கூட்டத்தின் நடுவே துப்பாக்கியுடன் யாரையோ சுட நின்று கொண்டிருக்கும் சிம்பு, திடீரென கட்சி கூட்டத்தில் பெரும் சத்தத்துடன் தீப்பிழம்பாய் பாம் வெடித்து சிதறுகிறது. தீப்பொறி தெறிக்க வெளியாகியுள்ள இந்த மாநாடு ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இணையதளத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருக்க யுவன் சங்கர் ராஜாவின் பிஜிஎம் கூடுதல் பலமாக அதிர வைக்கிறது. மாநாடு ஃபஸ்ட் லூக் மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சிம்புவின் ஆட்டம் இனிமேதான் ஆரம்பம் என கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X