ஒரு பக்கம் ரத்தம்.. மூன்றாம் கண்ணாக புல்லட்.. 'மாநாடு' பர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. ஃபேன்ஸ் உற்சாகம்!
சென்னை: சிம்புவின் மாநாடு பர்ஸ்ட் லுக் வெளியானதை அடுத்து, ரசிகர்கள் அதை வைரலாக்கி வருகின்றனர்.
Recommended Video
வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார், சிம்பு. இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.
இதற்கு முன் குறுகிய கால படமாக உருவாகும் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார், சிம்பு.

ஷூட்டிங் தொடக்கம்
இதை சுசீந்திரன் இயக்கியுள்ளார். நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மாநாடு படத்தின் ஷூட்டிங் இப்போது தொடங்கியுள்ளது. சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உள்பட பலர் நடிக்கின்றனர்.

எடை குறைந்தார்
இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு. இந்தப் படத்துக்காக உடல் எடையை அவர் குறைத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

மாநாடு அப்டேட்
இந்நிலையில், புதுச்சேரியில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடந்து வருகிறது. டிசம்பர் 24- ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாநாடு படம் குறித்த அப்டேட்டை வெளியிடப் போவதாக, இயக்குனர் வெங்கட் பிரபு இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இன்று காலை
அதன்படி வரும் 21 ஆம் தேதி காலை 10:44 மணிக்கு பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். இதையடுத்து சிம்பு ரசிகர்கள் அந்த போஸ்டரை காண அதிக ஆவலாக இருந்தனர். இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று காலை வெளியிட்டுள்ளார்.

நெற்றியில் புல்லட்
முகத்தில் ரத்தம் வடிய, நெற்றியில் புல்லட் இருக்க, அமர்க்களமாகப் பார்க்கிறார் சிம்பு. இதையடுத்து ரசிகர்கள் அந்த போஸ்டரை கொண்டாடி வருகின்றனர். பர்ஸ்ட் லுக், தரமான சம்பவமா இருக்கு என்றும், பழைய முகத்தைப் பார்க்க சிறப்பா இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து #MaanaaduFirstLook என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி ருகிறது.


Click it and Unblock the Notifications











