யுவனின் மயக்கும் குரலில்… மெஹரஸைலா… மெஹரஸைலா… வைரலாகும் பாடல்!

சென்னை : மாநாடு திரைப்படத்தின் முதல் பாடலான மெஹரஸைலா என்ற பாடல் யுவன் மற்றும் பவதாரணியின் மயக்கும் குரலில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிடோர் நடிப்பில் இப்படம் உருவாகி உள்ளது.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இயக்கம்

இயக்கம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி வருகிறது. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரன் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சிலம்பரசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டப்பிங் பணிகள் ஆரம்பம்

டப்பிங் பணிகள் ஆரம்பம்

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்தன. படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதையடுத்து ரம்ஜான் பண்டிகையின் போது மாநாடு திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபுவின் தாயார் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் பாடல் வெளியீடு தள்ளிப்போனது.

ஜூன் 21ந் தேதி வெளியாகும்

யுவன் சங்கர் ராஜாவின் யு1 நிறுவனம் மாநாடு திரைப்படத்தின் இசை உரிமையை வாங்கியதைத் தொடர்ந்து முதல் சிங்கள் ஜூன் 21ந் தேதி மதியம் வெளியாகும் என கடந்த வாரம் யுவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

முதல் சிங்கிள் வெளியானது

இதையடுத்து, மாநாடு திரைப்படத்தின் முதல் பாடலான மெஹரஸைலா என்ற பாடல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. காதலை அழகாக கூறும் பாடலாக வெளியாகி இருக்கும் இந்த பாடலுக்கு யுவன் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் பவதாரணி மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் மயக்கும் குரலில் இந்த பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இரவு 7.30 மணிக்கு

இரவு 7.30 மணிக்கு

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், மாநாடு படத்தின் முதல் பாடலான மெஹரஸைலா பாடலின் முழு பாடல் இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உங்கள் நேரம் இப்போது தான்...அன்பான தம்பிகளே தொடங்குங்கள் என ரீ ட்விட் செய்துள்ளார்.

More from Filmibeat

Read more about: simbu சிம்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X