அதே டைம்.. நயன்.. நயன்.. நெற்றிக்கண் டீசர் டைம்லயே நாளைக்கு மாநாடு மாஸ் அப்டேட்.. கு(சி)ம்புதான்!
சென்னை: நடிகர் சிம்புவின் மாநாடு படம் குறித்த மாஸ் அப்டேட் நாளை காலை வெளியாக உள்ளது.
Recommended Video
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு விக்னேஷ் சிவன் இன்று காலை 09:09 மணிக்கு நயன்.. நயன்.. என வரும் நேரத்தில் நெற்றிக்கண் டீசரை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், அதே நேரத்தில் நாளை காலை சிம்புவின் மாநாடு குறித்த மாஸ் அப்டேட்டை வெளியிடப் போவதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

வேற மாறி
நயன்தாராவின் கோலமாவு கோகிலா இயக்குநர் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான செல்லம்மா பாடல் வீடியோவில் பேசிய வேற மாறி வசனம் ரசிகர்கள் மத்தியில் வேற மாறி டிரெண்டாகி வருகிறது. அதே வசனம் தற்போது அப்படியே அழகா சிம்புவுக்கு பொருந்தும் விதமாக மாறியுள்ளது. இப்போ சிம்பு ஆளே மாறி வேற மாறி ஆகிட்டார்.

சிம்பு தரிசனம்
தீபாவளி அதுவுமா அதிகாலையில் சிம்புவின் தரிசனத்தோடு தான் ரசிகர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தனர். என்னையவாடா காலையில எந்திரிக்கலன்னு சொன்னீங்க, எல்லோரும் பிரம்ம முகூர்த்தத்துல எந்திரிங்க என ஈஸ்வரன் டீசரை ரிலீஸ் பண்ணதும், 28 நாட்களில் அதிரடியாக அந்த படத்தை முடித்துக் கொடுத்ததும் என நீங்க வேற லெவல் சார் என சொல்லும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

மாநாடு மாஸ் அப்டேட்
ஈஸ்வரன் அப்டேட், ஏகப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள், சோஷியல் மீடியா என்ட்ரி என தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வரும் சிம்பு, அடுத்ததாக, ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்த மாஸ் அப்டேட்டை நாளை காலை வெளியிட உள்ளார். தற்போது அது தொடர்பான அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

நயன் நயன்
இன்று காலை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு 09:09 மணிக்கு விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'நெற்றிக்கண்' டீசர் வெளியிடப்பட்ட நிலையில், அதே டைமில் நாளை காலை மாநாடு அப்டேட்டை வெளியிட போகிறோம் என வெங்கட் பிரபு போட்டுள்ள ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், ரொம்ப குசும்புத்தான் உங்களுக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிம்பு நயன் காதல்
விக்னேஷ் சிவன், பிரபுதேவாவுக்கு முன்னாடியே சிம்புவும் நயன்தாராவும் வல்லவன் பட சமயத்தில் காதல் செய்ததும், லிப் லாக் கிஸ் அடித்ததும் ஊருக்கே தெரிந்த விஷயம். நயன்தாராவின் பிறந்தநாளை தொடர்ந்து நாளை மாநாடு அப்டேட்டை கொடுப்பதும், அதே டைம்ல கொடுப்பதையும் நெட்டிசன்கள் இன்னமும் பழசை மறக்கலையோ என கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

சிங்கம் களமிறங்கிடுச்சு
மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என்றும், சிங்கம் களமிறங்கிடுச்சு, சிம்பு தரிசனம், தலைவா இது போதும் தலைவா, ஒரே ஒரு அப்டேட் தான கேட்டோம்.. இப்படி அள்ளி போட்டுக் கொண்டுட்டு வந்துட்டீங்களே தலைவா என நானும் ரவுடி தான் வசனம் என கமெண்ட்டுகள் களைகட்டுகின்றன.

மாநாடு அரசன்
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாக உள்ள மாநாடு படத்தின் ஷூட்டிங் அண்மையில் தொடங்கியது. மாநாடு அரசன் வந்துட்டான் என சிம்பு ரசிகர்கள், அதிரடியான அப்துல் காலிக்கின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











