நவம்பரில் படப்பிடிப்பு ஆரம்பம்.. மாநாடு மாஸ் அப்டேட்.. சிம்பு ரசிகர்கள் ஹாப்பி!
சென்னை : வெங்கட் பிரபு மற்றும் சிம்பு முதன்முறையாக இணையும் மாநாடு திரைப்படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வருகிறது.
பிரபலமான திரைப்பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் மாநாடு, சமீபகாலமாக ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இப்பொழுது சிம்புவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அதன் தயாரிப்பாளர் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்திற்கு பிறகு இந்த ஒரு படமும் சிம்புவுக்கு வெளியாகாத நிலையில் அவரது ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தை மலை போல் நம்பியிருக்க அதன் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக வெளியான அதிகாரப்பூர்வ தகவலை அறிந்த சிம்புவின் ரசிகர்கள் இப்பொழுது குஷியில் உள்ளனர்.

குறும்படம்
பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே சமீபத்தில் வெளியான "கார்த்திக் டயல் செய்த எண்" குறும்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிம்புவின் காம்போவை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

முதன்முறையாக சிம்புவுடன்
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி அதில் வெற்றி நடைபோட்டு வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு.சென்னை 28, மங்காத்தா, சரோஜா என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இப்பொழுது முதன்முறையாக சிம்புவுடன் இணைந்து மாநாடு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

மாநாடு
மாநாடு திரைப்படம் அரசியல் சம்பந்தப்பட்ட கதை களத்தை கொண்ட திரைப்படம் என அப்போது செய்திகள் வலம் வருவதை தொடர்ந்து நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போக பல்வேறு பிரச்சினைகளால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து தடை பட்டுக் கொண்டே இருந்தது.

மீண்டும் தொடங்க உள்ளது
ஒருவழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிந்து மாநாடு தொடங்கும் நேரத்தில் கொரானா பாதிப்பு காரணமாக மீண்டும் அனைத்து படப்பிடிப்புகளும் முடக்கப்பட்ட நிலையில், இப்பொழுது ஏழு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

100 கோடி பட்ஜெட்
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் என பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்து வர இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 100 கோடியை தாண்டியுள்ளது.

நவம்பர் முதல் வாரம்
மாநாடு படத்தை பற்றிய அப்டேட்டை கேட்டு வந்த சிம்புவின் ரசிகர்களுக்கு அதைப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி " தடைகளை உடைத்து கொரானா பாதிப்புகள் கடந்து... மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம் " என்ற மாஸான அப்டேட்டை வெளியிட்டதைத் தொடர்ந்து சிம்புவின் ரசிகர்கள் இப்பொழுது மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











