மாநாடு படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் வெளியீடு... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு.
Recommended Video
படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
வரும் 25ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவின் மாநாடு
நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தின் வெற்றியை அடுத்து நடித்துள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கடந்த தீபாவளியையொட்டி இந்தப் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து விலகியது.

தள்ளிப் போன தீபாவளி
விநியோகஸ்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளி பந்தயத்தில் இருந்து விலகுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதையடுத்து மாநாடு படக்குழுவின் தீபாவளி நவம்பர் மாத இறுதிக்கு தள்ளிப் போயுள்ளதாக வெங்கட் பிரபுவும் கூறியிருந்தார்.

25ம் தேதி ரிலீஸ்
இந்நிலையில் வரும் 25ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, எஸ்ஏ சந்திரசேகர், ஒய் ஜி மகேந்திரன், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டைம் லூப் பாணி படம்
டைம் லூப் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர், ட்ரெயிலர், பாடல் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகியுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரிலீசுக்கு முன்னதாக ட்ரெயிலர் இன்றைய தினம் இரண்டாவது ட்ரெயிலராக வெளியாகியுள்ளது.

2வது ட்ரெயிலர் ரிலீஸ்
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்த இரண்டாவது ட்ரெயிலர் உள்ளது. ஆயினும் முதல் ட்ரெயிலரை நினைவுப்படுத்தும் வகையில் இந்த ட்ரெயிலர் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது இந்த ட்ரெயிலர்கள் வழியாக தெரிகிறது.

இசை வெளியீடு
சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு தனக்கு அதிக பிரச்சினைகள் கொடுக்கப்படுவதாகவும் ரசிகர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். படத்தில் அவரை வித்தியாசமான சிம்புவாக பார்க்கலாம் என்று யுவனும் குறிப்பிட்டிருந்தார். இவை படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











