ரூ.100 கோடி க்ளப்பில் இணையும் மாநாடு... சிம்பு கேரியரில் முதல் படம் இதுதானாம்!

சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியான படம் மாநாடு.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் தற்போது 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாநாடு படம்

மாநாடு படம்

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் மாநாடு. கடந்த தீபாவளியன்று படம் வெளியாக இருந்த நிலையில் விநியோகஸ்தர்களின் நலனைகருத்தில் கொண்டு படத்தின் ரிலீசை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார்.

கடந்த மாதத்தில் ரிலீஸ்

கடந்த மாதத்தில் ரிலீஸ்

இந்நிலையில் கடந்த 25ம் தேதி ரிலீசான இந்தப் படம் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியுள்ளது. டைம் லூப் பாணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் திரைக்கதை உள்ளிட்டவை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

இயக்குநர்கள் பாராட்டு

இயக்குநர்கள் பாராட்டு

படத்தை இயக்கியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபுவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநர்கள் பார்த்திபன், பாரதிராஜா உள்ளிட்டவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 25வது நாளை நாளைய தினம் நெருங்கியுள்ளது.

வசூல்மழையில் மாநாடு படம்

வசூல்மழையில் மாநாடு படம்

தொடர்ந்து 4 வாரங்களாக 125 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது மாநாடு. இதனிடையே, படம் வெளியான இடங்களில் எல்லாம் வசூல்மழையை பொழிந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை 58 கோடி ரூபாய் வசூலை படம் பெற்றுள்ளது.

ரூ. 100 கோடி க்ளப்பில் மாநாடு

ரூ. 100 கோடி க்ளப்பில் மாநாடு

மேலும் உலகளவில் இந்தப் படம் இதுவரை 97 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இந்தப் படம் இணையும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிம்புவின் சினிமா கேரியரில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விநியோகஸ்தர்கள் லாபம்

விநியோகஸ்தர்கள் லாபம்

இந்தப் படத்தை விநியோகித்தவர்கள் அனைவரும் 3 மடங்கு லாபத்தை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படம் வரும் 24ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரிலீசை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X