திரையரங்குகளில் வெற்றிகரமான 80வது நாளை எட்டிய சிம்பு படம்... ரசிகர்கள் கொண்டாடும் வெற்றி

சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் மாநாடு.

Recommended Video

105 இருந்து 72 கிலோவுக்கு வந்த சிம்பு.. ரசிகர்களை கண் கலங்க வைக்கும் 'அந்த' வீடியோ!

இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். டைம் லூப் அடிப்படையில் இந்தப் படம் வெளியானது.

இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியான படம் மாநாடு. படத்தை சூப்பர்ஹிட் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

 தள்ளிப் போன தீபாவளி

தள்ளிப் போன தீபாவளி

இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் அனைத்தும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தீபாவளி ரேசிலிருந்து விலகி அந்த மாதத்தின் இறுதியில் படம் வெளியானது. தங்களது குழுவின் தீபாவளி நவம்பர் 25ம் தேதி தான் என்று வெங்கட் பிரபுவும் முன்னதாக தெரிவித்திருந்தார்.

 சிறப்பான திரைக்கதை

சிறப்பான திரைக்கதை

இந்தப் படத்தின் ஸ்டோரி லைன் மற்றும் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு, எஸ்ஜே சூர்யா மற்றும் வெங்கட் பிரபுவிற்கு இந்தப் படம் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று படத்தை கொண்டாடி வருகின்றனர்.

டைம் லூப் பாணி திரைப்படம்

டைம் லூப் பாணி திரைப்படம்

எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் படத்தில் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பான வகையில் அவர்களது பங்களிப்பை அளித்துள்ளனர். டைம் லூப் என்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிய விஷயம். ஆயினும் சிறப்பான திரைக்கதையால் அதை சிறப்பாக கொடுத்துள்ளார் வெங்கட்பிரபு.

 திரையரங்குகளில் 80 நாட்கள்

திரையரங்குகளில் 80 நாட்கள்

இந்தப் படம் இந்த கொரோனா சூழ்நிலையிலும் திரையரங்குகளில் சிறப்பான வகையில் ஓடி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் 80 நாட்களை தற்போது வெற்றிகரமாக எட்டியுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிம்பு ரொம்ப பிசி

சிம்பு ரொம்ப பிசி

இந்தப் படம் நடிகர் சிம்புவிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அவர் அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல மற்றும் கொரோனா குமார் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X