28 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகள்... அதிரடி மாநாடு ட்ரெயிலர்!
சென்னை : நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் மாநாடு.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வெளியிடப்பட்ட 28 மணிநேரத்தில் படத்தின் ட்ரெயிலர் 5 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை புரிந்துள்ளது.

சிம்புவின் மாநாடு படம்
நடிகர் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் மாநாடு. இந்தப் படத்தை நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு டைரக்ட் செய்துள்ளார். படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாத்தேவுடன் மோதும் மாநாடு
தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்தே படமும் வெளியாக உள்ள நிலையில், அதனுடன் மாநாடு படமும் மோதவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. டைம் லூப் கான்செப்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ட்ரெயிலர் தாறுமாறாக அமைந்திருந்தது.

5 மில்லியன் பார்வைகள்
ஹாலிவுட்டில் வெளியான டெனெட் படத்தின் சாயல் இந்தப் படத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில் படத்தின் ட்ரெயிலர் மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் வெளியான 28 நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு வேண்டுகோள்
இந்த ட்ரெயிலரை இதுவரை பார்க்காவிட்டால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்றும் பார்த்தவர்கள் மீண்டும் பார்க்க பார்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இவ்வாறு கேட்கவில்லை என்றாலும் ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் ட்ரெயிலரை பார்த்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications