சிம்புவுக்கு உஷா ராஜேந்தர் கொடுத்த சொகுசு கார்.. மகன் தொடர்ந்து நடிப்பதால் அம்மாவின் அன்பு பரிசாம்!
சென்னை: நடிகர் சிம்புவுக்கு அவர் அம்மா உஷா ராஜேந்தர் சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஈஸ்வரன். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
பழநியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருக்கிறது. 33 நாட்களில் இதன் ஷூட்டிங்கை முடித்துள்ளனர்.

நிதி அகர்வால்
இதில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயின். மற்றொரு ஹீரோயினாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆகி இருக்கிறார், நடிகர் சிம்பு. இதன் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, கொரோனாவால் தாமதமான, மாநாடு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

சிம்பு ஜோடியாக
வெங்கட்பிரபு இயக்கும் இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இவர், 'அமைதிப்படை-2', 'கங்காரு', 'மிக மிக அவசரம்' படங்களைத் தயாரித்தவர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இதில், சிம்பு ஜோடியாக, கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

புதுச்சேரியில் ஷூட்டிங்
பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி, உதயா உட் பட பலர் நடிக்கின்றனர். இதில், அப்துல் காலிக் என்ற கேரக்டரில் நடிக்கிறார், சிம்பு. சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது.

மினி கூப்பர் ஆசை
இந்நிலையில், சிம்புக்கு சொகுசு காரான மினி கூப்பர் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதையடுத்து அவர் அம்மா உஷா ராஜேந்தர், மகன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதை அடுத்து அவருக்கு அந்த காரை, அன்பு பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட சிம்பு, தற்போது தனது புதிய காரில் உலா வருகிறார்.


Click it and Unblock the Notifications











