அடுத்த படமும் போச்சு.. டிராப் ஆகிறது சிம்புவின் ''மப்டி'' ரீமேக்.. ஷாக் காரணம்.. ரசிகர்கள் ஏமாற்றம்
நடிகர் சிம்பு தமிழில் நடிக்கும் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்பு தமிழில் நடிக்கும் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் நிறைய தயாரிப்பாளர்களை பகைத்து கொண்டு இருக்கிறார். சரியாக ஷூட்டிங் செல்லாமல் நிறைய தயாரிப்பாளர்களை தேவையில்லாமல் பகைத்து கொண்டு, படத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.
இதனால் நடிகர் சிம்பு இப்போது நல்ல ஹிட் படம் ஒன்றை கொடுப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். ஏஏஏ, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை.

மோசம்
செக்க சிவந்த வானத்திற்கு பின் நடிகர் சிம்புவிற்கு ஹிட் படம் எதுவும் வெளியாகவில்லை. நிறைய முக்கியமான படங்கள் டிராப் ஆனது. முக்கியமாக கான் படம் அதன்பின் தற்போது மாநாடு படம் ஆகிய படங்களை தவறவிட்டுவிட்டார்.

என்ன படம்
இந்த நிலையில்தான் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்பு நடித்து வந்தார்.
இதற்காக நடிகர் சிம்பு வெளிநாடு சென்று உடலை குறைத்துள்ளார். ஜிம் சென்று உடலை பிட்டாக மாற்றினார். அவரின் புது லுக் இணையத்தில் வைரலானது.

எப்படி நடக்கும்
இந்த நிலையில் தற்போது மப்டி படத்தின் ரீமேக்கும் டிராப் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து வந்தார். மப்டி படத்தின் கன்னட இயக்குனர் தர்ஷன்தான் படத்தை இயக்கி வந்தார்.

ஆனால் இல்லை
ஆனால் இவர் படத்தின் படப்பிடிப்பிற்கு சரியாக வரவில்லை. கால் சீட் கொடுத்துவிட்டு அவர் வெளிநாடு சென்றுவிட்டார். அவர் வெளிநாடு சென்று சுற்றியதில் தயாரிப்பாளருக்கு பெரிய லாஸ் ஆகியுள்ளது. இதனால் படப்பிடிப்பு தொடங்கி எதுவுமே நடக்காமல் இருந்துள்ளது. ஹீரோ இல்லாத சில காட்சிகள் மட்டும் பெங்களூரில் படமாக்கப்பட்டுள்ளது.

படம் டிராப்
இதனால் தயாரிப்பாளர் தரப்பு படத்தை மொத்தமாக டிராப் செய்வதாக அறிவித்துள்ளது. ஆம் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்த செய்தி தற்போது சிம்பு ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











