நம்பிக்கை அளிக்கும் சிம்புவின் லைன் அப்.. அடுத்தடுத்த படங்களின் அப்டேட்
சென்னை: சிம்பு நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஈஸ்வரன் கலவையான விமர்சனங்களை பெற்றது.
படபிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாமல் இருந்த சிம்பு சமீப காலமாக ஓய்வின்றி நடித்து வருகிறார்.
சிம்புவின் வரவிருக்கும் படங்களின் லைன் அப் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

வெங்கட் பிரபு இயக்கம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், SJ சூர்யா நடித்து வரும் படம் மாநாடு. இந்த படத்தின் டீசர் & பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இன்னும் இறுதிக்கட்ட பணிகளே எஞ்சி உள்ள நிலையில் ஜூலை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

ஜூலை இறுதியில்
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணையும் படம் நதிகளிலே நீராடும் சூரியன். இந்த படத்திற்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.

ரீமேக் திரைப்படம்
இதன் பின்னர் பத்து தல படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. கன்னடத்தில் வெளியாகி ஹிட் அடித்த Mufti படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல திரைப்படம். இந்த படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டீஜே உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார்.

விரைவில் அறிவிப்பு
இதனையடுத்து சிம்பு இயக்குனர் ராமுடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என தகவல்கள் முன்னர் வெளியாகின. தற்போது சிம்பு Ags தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











