பத்து தல இசை வெளியீட்டு விழா .. இதெல்லாம் கவனிச்சீங்களா? சுவாரசிய சம்பவங்களின் தொகுப்பு!

சென்னை : சிம்பு , கௌதம் கார்த்தி லீட்ரோலில் நடித்த பத்து தல திரைப்படம் இந்த மாதம் 30ந் தேதி வெளியாக உள்ளது.

கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற முஃப்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த சனிக்கிழமை நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடந்தது. இதில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.

இனி சர்வதேச படங்களில்

இனி சர்வதேச படங்களில்

பத்து தல இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிம்பு, தம் படத்திற்குப் பிறகு, சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கிருஷ்ணா தன்னிடம் கேட்டார். ஆனால், என்னால் அப்போது நடிக்க முடியாமல் போனது. அதனால் தான் பத்து தலை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது என்றார். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் திரைப்படங்களில் தான் இனி நடிக்கப்போவதாகவும் கூறினார்.

டான் கதாபாத்திரத்தில்

டான் கதாபாத்திரத்தில்

மேலும், இந்தப் படத்தில் எனக்கு ஜோடி கிடையாது என்னைக்குமே எனக்கு துணை என் ரசிகர்களான நீங்கள் தான்.. படத்திலேயும் ஜோடி இல்லை.. லைஃப்லையும் ஜோடி இல்லை என்று அதிரடியாக பேசினார் சிம்பு. இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்னும் டான் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

பெருமைப்படுகிறேன்

பெருமைப்படுகிறேன்

இப்படத்தில் கதாநாயகியான நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பத்து தல படத்தில் நடித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். கௌதம் வாசுதேவ் மேனனும் சிம்புவும் தனது தலைமுறைக்கு காதலை உரக்கச் சொன்னவர்கள் என்றும், கௌதம் மேனன் தொடர்ந்து நடித்து வருவதால், அவர் இனி படம் இயக்கமாட்டாரோ என்ற பயம் ஏற்படுகிறது. அவர் நிறைய காதல் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் நடிகை மேலும் கூறினார்.

தம்பி சிம்புக்காகத்தான்

தம்பி சிம்புக்காகத்தான்

இதையடுத்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், 'நம்ம சதம்' பாடலை சிம்புவை பாடவைக்க திட்டமிட்டதாகவும், ஆனால், அவர் தாய்லாந்துக்கு சென்றுவிட்டதால், அது நடக்கவில்லை என்றும், மேலும் தம்பி சிம்புக்காகத்தான் இந்த படத்திற்கு இசை அமைக்க ஒத்துக்கொண்டதாகவும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X