Pathu Thala Box Office Prediction: சிம்புவின் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா..? டல்லடிக்கும் புக்கிங்!
சென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கியது.
வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள பத்து தல படத்திற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூலிக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், இதுவரை கிடைத்த தகவலின் படி பத்து தல பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் சிம்புவுக்கு ஏமாற்றமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு
முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிம்புவின் மாஸும், ஏஆர் ரஹ்மானின் இசையும் தான் பெரிய பாசிட்டிவ் எனர்ஜி கொடுத்துள்ளது. இதனால் கண்டிப்பாக ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு எதிர்பார்த்துள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உட்பட மொத்த ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் 30 முதல் 40 கோடி என சொல்லப்படுகிறது. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என சிம்பு நம்பிக்கையில் உள்ளாராம்.

டிக்கெட் புக்கிங் ஸ்டேட்டஸ்
சிம்புவின் மாநாடு திரைப்படம் 110 கோடி வரை வசூலித்தது. ஆனால், வெந்து தணிந்தது காடு 80 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூலித்ததாக சொல்லப்படுகிறது. பத்து தல திரைப்படம் கன்னடத்தில் இருந்து ரீமேக் ஆகியுள்ளதால் பொதுவான ஆடியன்ஸிடம் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறுமா என்பதில் சந்தேகம் உள்ளது. இன்று முதல் டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பித்துவிட்டாலும் புக்கிங் இன்னும் சூடு பிடிக்கவில்லை என்றே திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிம்புவின் நம்பிக்கை
மாத கடைசியாக இருப்பதால் சிம்புவின் ரசிகர்களே டிக்கெட் புக்கிங் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் மார்ச் 31ம் தேதி வெற்றிமாறனின் விடுதலை திரைப்படமும் வெளியாகிறது. அதனால், ஜெனரல் ஆடியன்ஸ் விடுதலை படத்திற்கே முன்னுரிமை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பத்து தல படத்தின் வசூல் 50 முதல் 70 கோடி வரை மட்டுமே இருக்கும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் 100 கோடி வசூலிக்கும் என சிம்பு உறுதியான நம்பிக்கையில் இருக்கிறாராம்.

இதுதான் காரணம்
பத்து தல படத்தின் வெற்றி தான் தனது கேரியரை இன்னும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என சிம்பு நம்புகிறார். மேலும், இந்தப் படம் ஹிட் அடித்துவிட்டால் அடுத்த படங்களில் நடிக்க சம்பளத்தையும் உயர்த்திவிடலாம் என கணக்குப் போட்டு வைத்துள்ளார். இதனிடையே பத்து தல படத்தில் இருந்து ராவடி பாடலின் முழு வீடியோவையும் படக்குழு நேற்று வெளியிட்டது. இப்பாடலில் ஆர்யாவின் மனைவி சாயிஷா கிளாமராக ஆட்டம் போட்டு அதிரடி காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











