தரமான சம்பவத்திற்கு ரெடியான சிம்பு.. பத்து தல படத்தின் முக்கிய அப்பேட்.. மகிழ்ச்சியில் ஃபேன்ஸ்!

சென்னை : சிம்பு நடித்துள்ள பத்துதல திரைப்படம் குறித்த முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளதால், சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த சிம்புவிற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது.

இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி கிட்டத்தட்ட 20 கிலோ வரை குறைத்து பழைய சிம்புவாக காணப்பட்டார். அப்படத்தின் வெற்றி சிம்புவை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

வெந்து தணிந்தது காடு

வெந்து தணிந்தது காடு

மாநாடு திரைப்படத்தை அடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதை கொண்டும் வகையில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் கௌதம் மேனனுக்கு புல்லட் ஒன்றையும், சிம்புவுக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்தார்.

பத்து தல

பத்து தல

வெந்து தணிந்தது காடு வெற்றியைத் தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் ஒபெலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து, பத்து தல படத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு பத்து தல என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையில்

ஏஆர் ரஹ்மான் இசையில்

இந்தப் படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படத்தில், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, டப்பிங் என அனைத்துப்பணிகளும் முடிந்த படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

இந்நிலையில், ஸ்டூடியோ கிரின் பத்து தல திரைப்படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X