செயின்ட் ஜார்ஜ் கோட்டையே.. ஏஜிஆர் கோட்டைக்குள் நுழைய பயப்படும்டா..மாஸ் காட்டும் பத்து தல க்ளிம்ப்ஸ்!
சென்னை: சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் படம் பத்து தல.
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அந்த படத்தின் அசத்தலான க்ளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது.
எம்ஜிஆரை போல ஏஜிஆர் எனும் பெயரில் இந்த படத்தில் சிம்பு மாஸ் காட்டி நடித்துள்ளார்.

பத்து தல க்ளிம்ப்ஸ்
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல படத்தின் அதிகாரப்பூர்வ க்ளிம்ப்ஸ் தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது. ஏஜிஆர் எனும் நிழல் உலக தாதாவாக நடிகர் சிம்பு இந்த படத்தில் நடித்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக பத்து தல க்ளிம்ப்ஸ் அமைந்துள்ளது.

ஏஜிஆராக சிம்பு
எம்ஜிஆரை நினைவுப்படுத்தும் விதமாக ஏஜிஆர் எனும் பெயரில் டான் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் அட்டகாசமான க்ளிம்ஸ் வெளியாகி உள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான மஃப்டி படத்தின் ரீமேக் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு நிற சட்டை மற்றும் வேட்டி அணிந்து சிம்பு கொடுக்கும் என்ட்ரி நிச்சயம் தியேட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்கும் என்பது கன்ஃபார்ம்.

வித்தியாசமான ரோலில் கெளதம் கார்த்திக்
நவரச நாயகன் கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக ஓடாத நிலையில், நல்ல கதையை எதிர்நோக்கி காத்திருந்தார். இந்நிலையில், சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்ட உள்ளார் கெளதம் கார்த்திக்.

பிரியா பவானி சங்கர்
க்ளிம்ப்ஸ் காட்சியிலேயே வண்டி ஒன்று பிரியா பவானி சங்கர் மீது மோத வருவது போல அருகே வந்து பிரேக் அடித்து நிற்பதும் அவர் பதறிப் போவதுமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சிம்புவுக்கு தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசை
சிம்பு மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி என்றாலே பாடல்கள் வேற லெவல் ஹிட் தான். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து பத்து தல மற்றும் வெந்து தணிந்தது காடு என தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடித்து வருகிறார் சிம்பு. ஏஜிஆர் கதாபாத்திரத்திற்காக இசைப்புயல் போட்டுள்ள பிஜிஎம் வெறித்தனத்தின் உச்சம்.


Click it and Unblock the Notifications











