நினைவிருக்கா.. சிம்புவின் பத்து தல இசை வெளியீட்டு விழா.. சற்று நேரத்தில் தரமான சம்பவம்!

சென்னை : சிம்புவின் பத்து தல இசைவெளியீட்டுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.

கன்னடத்தில் வெளியாகி வசூலை அள்ளிய முஃப்தி திரைப்படத்தை இயக்குநர் கிருஷ்ணா பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்து உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது

இதில், பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், கலையரசன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிம்புவின் பத்து தல

சிம்புவின் பத்து தல

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தைத் தொடர்ந்து பத்து தல படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ளார். கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தாமதம் ஆனதால், மார்ச் 30ம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ளார். பத்து தல படத்தின் முதல் பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் மிரட்டலான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏகத்திற்கு எகுற வைத்துள்ளது. பத்து தல படத்தின் இரண்டாம் பாடலான நினைவிருக்கா? கடந்த வாரம் வெளியானது அந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.

பிரம்மாண்ட இசை விழா

பிரம்மாண்ட இசை விழா

இந்நிலையில், பத்து தல திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5 மணிக்கு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வெந்துதணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவிற்கு ஹெலிகாப்டரில் மாஸ் என்ட்ரி கொடுத்த சிம்பு, பத்து தல படவிழாவிற்கு எப்படி வரபோகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மீண்டும் லுக்கை மாற்றிய சிம்பு

மீண்டும் லுக்கை மாற்றிய சிம்பு

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சிம்பு தாய்லாந்தில் நேற்று சென்னை வந்துள்ளார். சிம்பு, முன்பைவிட மிகவும் ஸ்லிம்மாக மாறி உள்ளார். சிம்புவின் இந்த போட்டோவை பார்த்து வாயடைந்துப்போனார்கள். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிம்பு கமிட்டாகி உள்ளார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக STR 48 என பெயர்வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை தாய்லாந்தில் கற்றுவிட்டு நேற்று இந்தியா திரும்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X